பிரபலங்கள் பற்றி விமர்சனம் செய்யும் பயில்வான் ரங்கநாதன் தற்போது விஜய் டிவி தொகுப்பாளினியான டிடி என்கிற திவ்ய தர்ஷினியையும் விட்டு வைக்காமல், முகம் சுழிக்கும் வகையில் விமர்சித்துள்ளதற்கு, டிடி-யின் ரசிகர்கள் தங்களின் எதிர்ப்புகளை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
தொகுப்பாளர் என்பதை தாண்டி, ஒரு சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார் டிடி. நல தமயந்தி, விசில், பவர்பாண்டி, துருவநட்சத்திரம், சர்வம் தாள மயம் போன்றவை இவர் நடிப்பில் வெளியான படங்களாகும். அதே போல் பல படங்களில் கதாநாயகியாக நடிக்க கிடைத்த வாய்ப்புகளையும், ஒரு சில காரணங்களால் ஏற்று கொள்ள முடியவில்லை என்பதையும் தெரிவித்துள்ளார்.
காதலித்து திருமணம் செய்திருந்தாலும், சில வருடங்களையே இருவரும் விவாகரத்து பெற்று பிரிய முடிவு செய்தனர். இதற்க்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டது. குறிப்பாக டிடி, திருமணத்திற்கு பிறகும் பப், பார்ட்டி, என அத்துமீறி நடந்து கொண்டதே, இருவருக்கும் இடையே விவாகரத்து நடக்க காரணம் என சிலர் கூறினர். ஆனால் விவாகரத்து குறித்து தற்போது வரை டிடி விளக்கமாக கூறியது இல்லை.