தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருக்கும், சூர்யா மற்றும் கார்த்தியின் தந்தையும் பழம்பெரும் நடிகருமான சிவக்குமார் அந்தக் காலத்தில் படித்த போது, தன்னுடைய கல்வி கட்டணத்தையும், தற்போதைய கல்வி கட்டணத்தையும் ஒப்பிட்டு பேசி ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
அதே போல் ராதிகா ராடான் நிறுவனத்தின் மூலம் தயாரித்து நடித்த, 'அண்ணாமலை' தொடரிலும் நடித்து பிரபலமானார். சமீப காலமாக திரையுலகில் இருந்து மொத்தமாக விலகி, ஆன்மிகம், ஓவியம் வரைதல், யோக போன்ற வற்றிலும், தன்னுடைய மகன் சூர்யா நடத்தி வரும் அகரம் அறக்கட்டளையின் பணிகளிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்நிலையில் சமீபத்தில், அகரம் ஃபவுண்டேஷன் சார்பாக 44 வது அகரம் அறக்கட்டளை விருதுகள் நிகழ்ச்சி சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. இதில் நடிகர் சூர்யா - கார்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்த அறக்கட்டளை தொடங்கி 44 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு இந்த நிகழ்ச்சி நடந்தது. ஒவ்வொரு ஆண்டும் இந்த அறக்கட்டளையின் மூலம் மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கும் விழா நடைபெற்று வரும் நிலையில், இந்த ஆண்டும் இந்த பரிசளிப்பு விழா சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சிவகுமார்.. அந்த காலத்தில் ஒன்றாம் வகுப்பில் இருந்து பத்தாம் வகுப்பு வரை நான் படிப்பதற்கு 850 ரூபாய் தான் மொத்தமாகவே செலவானது. அப்போது காமராஜர் திட்டம் எல்லாம் கொண்டுவரவில்லை எனவே கட்டணம் செலுத்தி தான் படிக்கும் நிலை இருந்தது. ஆனால் இப்போது ப்ரீகேஜி படிப்பதற்கே... 2.5 லட்சம் ஆகிறது. கார்த்தியின் மகன் ப்ரீகேஜி தான் படிக்கிறார். அங்கு எந்த படமும் சொல்லி கொடுக்க மாட்டார்கள். ஒன்னுக்கு... ரெண்டுக்கு தான் அழைத்து செல்வார்கள். இதற்க்கு இவ்வளவு பணமா? அடப்பாவிகளா நல்லா இருப்பீங்களா என ஆவேசத்தை கொட்டி தீர்த்துள்ளார்.
நடிப்புக்கு பிரேக்... ஈஷா மையத்தில் பூரண ஆரோக்கியத்திற்காக தியான நிலையில் சமந்தா! வைரல் போட்டோஸ்!