Beast movie : விஜய்யின் ‘பீஸ்ட்’ படத்தை ரிலீஸ் செய்ய தடை - அரசின் அதிரடி அறிவிப்பால் ஷாக் ஆன ரசிகர்கள்

Published : Apr 05, 2022, 07:18 AM ISTUpdated : Apr 05, 2022, 07:19 AM IST

Beast Movie : தமிழில் தயாராகி உள்ள பீஸ்ட் திரைப்படத்தை தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளிலும் டப்பிங் செய்து பான் இந்தியா படமாக வெளியிட உள்ளனர்.

PREV
15
Beast movie : விஜய்யின் ‘பீஸ்ட்’ படத்தை ரிலீஸ் செய்ய தடை - அரசின் அதிரடி அறிவிப்பால் ஷாக் ஆன ரசிகர்கள்

மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பின்னர் நடிகர் விஜய் நடிப்பில் பிரம்மாண்டமாக தயாராகி உள்ள படம் பீஸ்ட். நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டேவும், வில்லனாக ஷான் டாம் சாக்கோவும் நடித்துள்ளனர். மேலும் செல்வராகவன், விடிவி கணேஷ், அபர்ணா தாஸ், யோகிபாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

25

தமிழில் தயாராகி உள்ள பீஸ்ட் திரைப்படத்தை தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளிலும் டப்பிங் செய்து பான் இந்தியா படமாக வெளியிட உள்ளனர். இப்படம் வருகிற ஏப்ரல் 13-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. பீஸ்ட் படத்தின் ரிலீஸ் நெருங்கி வருவதால் அப்படத்தின் புரமோஷன் பணிகளும் வேகமெடுத்துள்ளன.

35

அதன்படி இப்படத்தை புரமோட் செய்யும் விதமாக நடிகர் விஜய், நேர்காணல் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுள்ளார். 10 ஆண்டுகளுக்கு பின்னர் நடிகர் விஜய் பங்கேற்றுள்ள இந்த நேர்காணல் நிகழ்ச்சியை இயக்குனர் நெல்சன் தொகுத்து வழங்கினார். இந்நிகழ்ச்சி வருகிற ஏப்ரல் 10-ந் தேதி இரவு 9 மணிக்கு ஒளிபரப்பப்பட உள்ளது.

45

இந்நிலையில், பீஸ்ட் படத்துக்கு குவைத் நாட்டு அரசு தடை விதித்துள்ளது. பீஸ்ட் படத்தில் இஸ்லாமியர்களை பயங்கரவாதிகள் போல் சித்தரிக்கும் காட்சிகள் இடம்பெற்று உள்ளதால் இந்தப் படத்தை அந்நாட்டில் வெளியிட தடை விதிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பீஸ்ட் படத்தின் வசூலும் பாதிக்க வாய்ப்புள்ளது.

55

முன்னதாக விஷ்ணு விஷால் நடித்த எஃப்.ஐ.ஆர், துல்கர் சல்மானின் குரூப் ஆகிய படங்களுக்கும் தடை விதித்திருந்த குவைத் அரசு, தற்போது விஜய் நடித்துள்ள பீஸ்ட் படத்துக்கும் தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் அந்நாட்டில் உள்ள விஜய் ரசிகர்கள் பீஸ்ட் படம் பார்க்க முடியாத சூழல் உருவாகி உள்ளது.

இதையும் படியுங்கள்... Rajamouli : RRR சக்சஸ் பார்ட்டியில் ‘நாட்டு நாட்டு’ பாட்டுக்கு குத்தாட்டம் போட்ட ராஜமவுலி - வைரலாகும் வீடியோ

Read more Photos on
click me!

Recommended Stories