பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் சீரியலில் நடித்து கொண்டே...விதவிதமான மாடர்ன் உடையில் புகைப்படங்களை வெளியிட்டு பட வாய்ப்பு தேடி வரும் 'பாக்கியலட்சுமி' சீரியல் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டியின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ் வைரலாகி வருகிறது.
சன் டிவி-யில் ஒளிபரப்பான 'சன் சிங்கர்' நிகழ்ச்சியின் மூலம் தொகுப்பாளராக அறிமுகமானவர் தான் ரேஷ்மா. தொகுப்பாளினியாக இருந்த போது கிடைத்த பிரபலத்தை வைத்து, 'வாணி ராணி', 'மரகத வீணை', 'உயிர்மெய்' போன்ற சீரியல்களிலும் நடிக்க துவங்கினார்.
29
இந்த சீரியல்கள் அனைத்திலும் சிறிய சிறிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர், பட வாய்ப்புகளை தேடி நடிக்க துவங்கினார். அந்த வங்கியில் கடந்த 2015 ஆண்டு வெளியான 'மசாலா’ படத்தின் மூலம் அறிமுகமானார்.
இந்த படத்தை தொடர்ந்து நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான 'வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன்' படத்தில் புஷ்பா என்கிற இவரது கதாபாத்திரம் நல்ல வரவேற்பை பெற்றது.
49
இதன் பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடினார். பெரிதாக மக்கள் மத்தியில் எந்த அவப்பெயரும் இன்றி... நியூட்ரல் ரேஷ்மா என்கிற பெயரோடு வெளியேறினார்.
சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த 'அன்பே வா சீரியலில்' எதிர்மறையான கதாபாத்திரத்தில் இவர் நடித்து வந்த நிலையில், திடீர் என அதில் இருந்து விலகினார்.
69
தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் சீரியல்களில் ஒன்றான... 'பாக்கியலட்சுமி' சீரியலில் ராதிகா என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இவரது கதாபாத்திரத்திற்கு தற்போது வரை நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில்.. விரைவில் இவரது கேரக்டர் வில்லியாக சித்தரிக்கப்படுமா? என்கிற சந்தேகமும் எழுந்துள்ளது.
89
எப்போதும் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் செம்ம ஆக்ட்டிவாக இருக்கும் இவர், அவ்வப்போது மாடர்ன் உடையிலும், சேலையிலும் விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வசீகரித்து வருகிறார்.