ஜஸ்ட் மிஸ்ஸில் டிஆர்பியில் நம்பர் 1 இடத்தை நழுவவிட்ட அய்யனார் துணை; முதலிடம் யாருக்கு?

Published : May 02, 2025, 03:33 PM IST

விஜய் டிவி சீரியல்களில் சிறகடிக்க ஆசை சீரியலே டிஆர்பியில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், இந்த வாரம் டாப் 5 பட்டியலில் ஏதேனும் மாற்றம் உள்ளதா என்பதை பார்க்கலாம்.

PREV
14
ஜஸ்ட் மிஸ்ஸில் டிஆர்பியில் நம்பர் 1 இடத்தை நழுவவிட்ட அய்யனார் துணை; முதலிடம் யாருக்கு?

Top 5 Vijay TV Serial TRP : சின்னத்திரை சீரியல்களுக்கு மக்கள் மத்தியில் எந்த அளவுக்கு ரெஸ்பான்ஸ் இருக்கிறது என்பது அதன் டிஆர்பி ரேட்டிங்கை வைத்து தான் கணிக்கப்படுகிறது. இந்த டிஆர்பி ரேட்டிங் நிலவரம் ஒவ்வொரு வாரமும் வெளியிடப்படும். அதன்படி 2025-ம் ஆண்டின் 16வது வாரத்திற்கான டிஆர்பி ரேட்டிங் நிலவரம் வெளியாகி உள்ளது. அதில் விஜய் டிவி சீரியல்களில் கடந்த சில வாரங்களாக ஆதிக்கம் செலுத்தி வந்த சின்ன மருமகள் சீரியல் பின்னுக்கு தள்ளப்பட்டு உள்ளது. டாப் 5 பட்டியலில் அந்த சீரியல் இடம்பிடிக்கவில்லை.

24
அய்யனார் துணை

கெத்து காட்டும் அய்யனார் துணை

சிறகடிக்க ஆசை சீரியல் தான் அதிக டிஆர்பி பெற்று இந்த வாரம் முதலிடம் பிடித்துள்ளது. அந்த சீரியலுக்கு 7.13 டிஆர்பி ரேட்டிங் கிடைத்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக புத்தம் புதிய சீரியலான அய்யனார் துணை உள்ளது. அந்த சீரியல் 6.71 டிஆர்பி புள்ளிகளை பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்த சீரியலின் நேரம் மாற்றப்பட்ட பின்னர் இதன் டிஆர்பி ரேட்டிங் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்த சீரியலில் மதுமிதா நாயகியாக நடிக்கிறார். இவர் முன்னதாக சன் டிவி எதிர்நீச்சல் தொடரில் நடித்திருந்தார்.

34
பாக்கியலட்சுமி

பரிதாப நிலையில் பாக்கியலட்சுமி

7 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த அய்யனார் துணை சீரியல் கடந்த மாதம் முதல் 8.30 மணிக்கு மாற்றப்பட்டது. இந்த நேர மாற்றத்திற்கு பின்னர் அய்யனார் துணை சீரியல் டி.ஆர்.பியில் மளமளவென முன்னேறி வருகிறது. ஆனால் இதற்கு முன்னர் 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த பாக்கியலட்சுமி சீரியல், தற்போது 7 மணிக்கு மாற்றப்பட்டதை தொடர்ந்து அந்த சீரியல் டிஆர்பியில் பின்னடைவை சந்தித்து உள்ளது. அது தற்போது 4.56 புள்ளிகளுடன் 5ம் இடத்தை பிடித்துள்ளது.

44
சின்ன மருமகள்

பின்னுக்கு தள்ளப்பட்ட சின்ன மருமகள்

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் 3-ம் இடத்தை பிடித்துள்ளது. இந்த சீரியலுக்கு 6.37 டிஆர்பி புள்ளிகள் கிடைத்துள்ளன. அடுத்ததாக நான்காவது இடத்தில் ஆஹா கல்யாணம் சீரியல் உள்ளது. இந்த சீரியல் 5.02 டிஆர்பி ரேட்டிங்கை பெற்றுள்ளது. கடந்த சில வாரங்களாக டாப் 5 பட்டியலில் இடம்பிடித்த சின்ன மருமகள் சீரியல் இந்த வாரம் பெரும் சறுக்கலை சந்தித்து உள்ளது. அந்த சீரியல் 4.29 டிஆர்பி ரேட்டிங் உடன் ஆறாவது இடத்தை பிடித்துள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories