8 வயதில் யுவன் போட்ட ட்யூன்
இளையராஜாவுக்கு பின் அவர் மகன் கார்த்திக் ராஜா இசையமைப்பாளராக அறிமுகமானாலும் அவரால் தந்தை அளவுக்கு ஜொலிக்க முடியவில்லை. பின்னர் ராஜாவின் கடைக்குட்டியான யுவன் சங்கர் ராஜா 1997ல் வெளியான அரவிந்தன் படம் மூலம் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி, குறுகிய காலத்தில் பல வெற்றிப்பாடல்களை கொடுத்து தந்தைக்கு நிகரான பெயரையும் புகழையும் பெற்றார். சிறுவயதில் இருந்தே இசையின் மீது ஆர்வம் கொண்டிருந்த யுவன் 8 வயதில் போட்ட ட்யூன் ஒன்று இளையராஜாவை வெகுவாக கவர்ந்திருக்கிறது.