Sivakarthikeyan Will Join in Atlee - Allu Arjun Movie : அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாக உள்ள பான் இந்தியா திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனும் நடிக்க உள்ளாராம்.
கோலிவுட்டில் ஜீரோ பிளாப் இயக்குனராக வலம் வருபவர் அட்லீ. இவர் தமிழில் இதுவரை இயக்கிய ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் ஆகிய நான்கு திரைப்படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தன. இப்படங்களின் வெற்றியை தொடர்ந்து பாலிவுட்டுக்கு சென்ற அட்லீ, அங்கு ஷாருக்கானை வைத்து ஜவான் என்கிற மாஸ் ஹிட் படத்தை இயக்கினார். அதில் நயன்தாரா, விஜய் சேதுபதி, யோகிபாபு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தனர். இப்படம் பாக்ஸ் ஆபிஸில் 1000 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.