Vaadivaasal Update: Suriya Fans Rejoice After GV Prakash News : சூர்யா ஹீரோவாக நடிக்கவுள்ள படம் வாடிவாசல். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கும் பாடல்களின் வேலைகள் ஆரம்பமாகிவிட்டன.
சூர்யா நடிக்கும் வாடிவாசல் படத்தில் பிரம்மாண்டமான காட்சிகள் இருக்கும் என்று வெற்றிமாறன் ஏற்கனவே சொல்லியிருந்தார். கிட்டத்தட்ட 50 அல்லது 60 நாட்கள் இந்த காட்சிகள் படமாக்கப்படும் என்றும் அவர் கூறியிருந்தார். இந்த புதிய அப்டேட்டால் சூர்யா ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். வாடிவாசல் சூர்யாவின் திரை வாழ்க்கையில் ஒரு முக்கியமான படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார்.
24
Actor Suriya starrer Retro
சூர்யா நடிப்பில் தற்போது ரெட்ரோ படம் உருவாகி வருகிறது. இப்படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்குகிறார். இந்த படம் மே 1ஆம் தேதி ரிலீசாக உள்ளது. இதில் பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடிக்கிறார். ஜோஜு ஜார்ஜ், ஜெயராம், கருணாகரன், நாசர், பிரகாஷ் ராஜ், சுஜித் சங்கர், தரக் பொன்னப்பா, தமிழ், கிருஷ்ணகுமார் பாலசுப்ரமணியன், பிரேம் குமார் ஆகியோரும் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்கிறார். ஜாக்கி மற்றும் மாயாபாண்டி கலை இயக்குனர்களாக பணியாற்றுகிறார்கள்.
பிரவீன் ராஜ் ஆடை வடிவமைப்பாளராகவும், கெச்ச காம்ஃபக்டே சண்டைக் காட்சிகளை வடிவமைக்கிறார். 2டி என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் இந்த படத்தின் இணை தயாரிப்பாளர்கள் ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன், கார்த்திகேயன் சந்தானம். வினோத் சுகுமாரன் ஒப்பனையும், சுரேஷ் ஜி மற்றும் அழகியகூத்தன் ஒலி வடிவமைப்பும், ஷெரீப் எம் நடனமும், முகமது சுபைர் உடைகளும், தினேஷ் எம் புகைப்படங்களும், டூனே ஜான் விளம்பர வடிவமைப்புகளும், சுரேஷ் ரவி வண்ணங்களும், பி செந்தில் குமார் தயாரிப்பு கட்டுப்பாட்டாளராகவும், கணேஷ் பி எஸ் தயாரிப்பு நிர்வாகியாகவும் பணியாற்றுகிறார்கள்.
44
suriya Movie Update
இதுதவிர சூர்யாவின் 45வது படமும் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தை ஆர்.ஜே.பாலாஜி இயக்குகிறார். இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். சூர்யா கடைசியாக நடித்த கங்குவா படம் உலக அளவில் 100 கோடி ரூபாய் வசூல் செய்தது. இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கியிருந்தார். சூர்யா டைட்டில் ரோலில் நடித்திருந்தார். அதிக எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதனால் அவரின் கம்பேக்குக்காக ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள்.