மிக பெரிய பொருட்செலவில் உருவாகியுள்ள இந்த படத்தில் நடிகர் ஷாருக்கானுக்கு ஜோடியாக, நயன்தாரா நடிக்கிறார். விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க, ப்ரியாமணி, யோகி பாபு, மன்சூர் அலிகான், உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். மேலும் இப்படத்தில் சஞ்சய் தத் மற்றும் தீபிகா படுகோன் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அனிருத் இசையில், ஜிகே விஷ்ணு ஒளிப்பதிவில், ரூபன் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை ஷாருக்கானின் ரெட் சில்லி என்டர்டைன்மென்ட் நிறுவனம் சார்பில் அவரின் மனைவி கௌரி கான் தயாரித்துள்ளார்.