காப்பி சர்ச்சையில் சிக்கிய அட்லீ அல்லு அர்ஜூனின் AA22 பட போஸ்டர்!

Published : Apr 09, 2025, 05:15 PM IST

Atlee Allu Arjun AA22 Movie Poster Copy From Dune Movie : அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடிப்பது குறித்து தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனம் வீடியோ வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

PREV
19
காப்பி சர்ச்சையில் சிக்கிய அட்லீ அல்லு அர்ஜூனின் AA22 பட போஸ்டர்!
Atlee - Allu Arjun Movie, AA 22

Atlee Allu Arjun AA22 Movie Poster Copy From Dune Movie : ஐகான் ஸ்டார் என்று அழைக்கப்படும் அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியான புஷ்பா 2 படத்திற்கு பிறகு தனது 22ஆவது படமான AA22 படத்தில் நடிக்கிறார். புஷ்பா 2 படமானது உலகம் முழுவதும் வெளியாகி ரூ.1800 கோடி வரையில் வசூல் குவித்தது. இந்தப் படத்தைத் தொடர்ந்து தற்போது இயக்குநர் அட்லீ இயக்கத்தில் AA22 என்ற படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

29
Allu Arjun AA 22 Movie

இந்த நிலையில் தான் அல்லு அர்ஜூனின் 43ஆவது பிறந்தநாளை முன்னிட்டு இந்தப் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் வீடியோ வெளியிட்டு AA22 படம் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

39
Allu Arjun and Atlee

அதிகப்படியான VFX காட்சிகள் நிறைந்த இந்தப் படத்தின் அதிகாரப்பூர்வ வீடியோவில் VFX இயக்குநர்கள் பலர் இடம் பெற்றிருந்தனர். அவர்களுடன் இணைந்து தான் இந்தப் படம் உருவாக இருக்கிறது. இந்த வீடியோ 6 மில்லியனுக்கும் அதிகமான வியூஸ் பெற்று சாதனை படைத்து வருகிறது.

49
Dune vs AA22 Movie

இந்த நிலையில் தான் சன் பிக்சர்ஸ் நிறுவனம் பகிர்ந்த போஸ்டர் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த போஸ்டரை பார்க்கும் போது அது டிமோதி சலமெட் மற்றும் ஜெண்டயா ஆகியோரது நடிப்பில் வெளியான சைண்டிபிக் படமான டியூன் (Dune) படத்தின் போஸ்டரைப் போன்று இருப்பதாக ரசிகர்கள் பலரும் விமர்சிக்க தொடங்கினர்.

59
AA22 x A6

ஏற்கனவே அட்லீ மீது காப்பி அடிக்கும் இயக்குநர் என்று பல குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டு வரும் நிலையில் இப்போது அந்த போஸ்டராலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

69
Allu Arjun Next Movie with Atlee

அந்த டியூன் பட போஸ்டரில் பாலைவனம், கதாபாத்திர அமைப்புகள் ஆகியவை எல்லாம் ஒரே மாதிரியாக இருப்பதை பார்க்கலாம். காப்பி பேஸ்ட் கண்டெண்ட் அட்லீக்கு முதல் முறை அல்ல. இதற்கு முன் பல படங்களில் அட்லீ காப்பி பேஸ்ட் போஸ்டரைத் தான் வெளியிட்டுள்ளார். படமும் பல படங்களின் சாயல் என்று அவர் மீது விமர்சிக்கப்பட்டது.

79
Allu Arjun Next Movie with Director Atlee

இது குறித்து கடந்த 2023 ஆம் ஆண்டு அட்லீ அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு இது போன்ற விமர்சனங்கள் சர்வ சாதாரணம் தான். உலகின் நான் மட்டும் இது போன்ற விமர்சனங்களை எதிர்கொள்ளவில்லை.

89
Dune-2 vs AA 22 Movie

ஏராளமான இயக்குநர்கள் இது போன்ற விமர்சனங்களை எதிர்கொண்டு தான் வருகிறார்கள். 30 வருட சினிமா வாழ்க்கையில் எனது கதை போன்று யாரும் கதை சொன்னது இல்லை.

99
Dune vs AA22, A6

என்னுடைய படங்களை மற்ற படங்களுடன் ஒப்பிட்டு யாரேனும் ஒரு கருத்தை அனுப்பினால், எனது முயற்சி, நேர்மை, உழைப்பு என்று அனைத்தும் காப்பி என்று ஒரு போதும் நினைக்கமாட்டேன் என்று கூறியுள்ளார். முழுக்க முழுக்க சயிண்டிபிக் கதையை மையப்படுத்திய படமாக இந்தப் படம் உருவாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories