குட் பேட் அக்லி முதல் சாவா வரை; இந்த வாரம் தியேட்டர் & OTTயில் இத்தனை படங்கள் ரிலீஸா?

Published : Apr 09, 2025, 03:27 PM IST

அஜித் நடித்துள்ள குட் பேட் அக்லி உள்பட ஏப்ரல் மாதம் 2வது வாரத்தில் என்னென்ன படங்கள் தியேட்டர் மற்றும் ஓடிடியில் ரிலீஸ் ஆகிறது என்பதை பார்க்கலாம்.

PREV
14
குட் பேட் அக்லி முதல் சாவா வரை; இந்த வாரம் தியேட்டர் & OTTயில் இத்தனை படங்கள் ரிலீஸா?

This week's movies: Full list from Good Bad Ugly to Black Mirror S7! ஏப்ரல் மாதம் முதல் வாரம் தமிழில் பெரியளவில் படங்கள் ரிலீஸ் ஆகவில்லை. இதற்கு முக்கிய காரணம் அஜித்தின் குட் பேட் அக்லி (Good Bad Ugly) திரைப்படம் தான். இப்படம் ஏப்ரல் 10ந் தேதி ரிலீஸ் ஆவதால் அதற்கு தான் பெரும்பாலான திரையரங்குகள் ஒதுக்கப்படும் என்பதை கருத்தில் கொண்டு கடந்த வாரம் தமிழ் சினிமாவில் புதுப்படங்கள் பெரியளவில் ரிலீஸ் ஆகவில்லை. இந்த வாரமும் அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் மட்டும் தான் தமிழ் நாட்டில் ரிலீஸ் ஆக உள்ளது.

24
Ajith Kumar in 'Good Bad Ugly'

சிங்கம் போல் சிங்கிளாக ரிலீஸ் ஆகும் குட் பேட் அக்லி

குட் பேட் அக்லி படத்துக்கு போட்டியாக எந்த தமிழ் படமும் ரிலீஸ் ஆகாததால் சிங்கம் போல் சிங்கிளாக ஏப்ரல் 10ந் தேதி திரைக்கு வருகிறது அஜித் படம். இப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி உள்ளார். இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். போட்டிக்கு எந்த படமும் ரிலீஸ் ஆகாதது ஒரு புறம் இருக்க, மறுபுறம் தொடர்ந்து ஐந்து நாட்கள் விடுமுறை வருவதால் குட் பேட் அக்லி திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

இதையும் படியுங்கள்... அஜித்துக்கு எமனாக அமைந்த ஏப்ரல் மாதம்; தப்புமா குட் பேட் அக்லி?

34
Bazooka, Maranamass, Alappuzha gymkhana

தியேட்டரில் ரிலீசாகும் மற்ற மொழி படங்கள்

மலையாளத்தில் மம்முட்டி நடித்த பசூகா திரைப்படம் ஏப்ரல் 10ந் தேதி ரிலீஸ் ஆகிறது. அதேபோல் மலையாளத்தில் ஆழப்புழா ஜிம்கானா என்கிற திரைப்படமும் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீஸ் ஆகிறது. இதுதவிர மரண மாஸ் என்கிற மலையாள திரைப்படமும் ஏப்ரல் 10ந் தேதி திரைக்கு வருகிறது. அதேபோல் இந்தியில் சன்னி தியோல் நடித்துள்ள ஜாட் திரைப்படம் ஏப்ரல் 10ந் தேதி ரிலீஸ் ஆகிறது. அதேபோல் தெலுங்கில் ஜேக் என்கிற படம் ரிலீஸ் ஆகிறது.

44
Chhaava OTT release

ஓடிடியில் ரிலீஸ் ஆகும் படங்கள்

ஓடிடியில் இந்த வாரம் ராஷ்மிகா மந்தனா மற்றும் விக்கி கெளஷல் நடித்த சாவா திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது. இப்படம் ஏப்ரல் 11ந் தேதி நெட்பிளிக்ஸில் ரிலீஸ் ஆகிறது. அதேபோல் வைபவ் நடித்த பெருசு திரைப்படமும் இந்த வாரம் ஓடிடியில் ரிலீஸ் ஆகிறது. இப்படம் வருகிற ஏப்ரல் 11ந் தேதி முதல் நெட்பிளிக்ஸில் ஸ்ட்ரீம் ஆகிறது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பிளாக் மிரர் சீசன் 7 வெப் தொடர் வருகிற ஏப்ரல் 10ந் தேதியில் இருந்து நெட்பிளிக்ஸில் ஸ்ட்ரீம் ஆக உள்ளது. அதேபோல் சோரி 2 திரைப்படம் அமேசான் பிரைமில் ஏப்ரல் 12ந் தேதியும், ஜிவி பிரகாஷ் குமார் நடித்த கிங்ஸ்டன் திரைப்படம் ஏப்ரல் 13ந் தேதி ஜீ5 ஓடிடி தளத்திலும் ரிலீஸ் ஆக உள்ளது.

இதையும் படியுங்கள்... Chhaava OTT: விக்கி கௌஷல் மற்றும் ராஷ்மிகா நடிப்பில் வெளியான 'சாவா' படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Read more Photos on
click me!

Recommended Stories