நடிகர் முரளியின் மகனான அதர்வா, 10 ஆண்டுகளுக்கு மேல் சினிமாவில் ஹீரோவாக நடித்து வந்தாலும் அவருக்கு பெரியளவில் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் என்பது இதுவரை கிடைக்கவில்லை. இருப்பினும் அவர் முயற்சியை கைவிடாமல் எப்படியாவது பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்துவிட வேண்டும் என தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கிறார். அவர் தற்போது ஹீரோவாக நடித்து திரைக்கு வந்துள்ள திரைப்படம் டிஎன்ஏ. இப்படத்தை நெல்சன் வெங்கடேசன் இயக்கி உள்ளார். இவர் ஏற்கனவே தமிழில் ஒரு நாள் கூத்து, மான்ஸ்டர், ஃபர்ஹானா போன்ற திரைப்படங்களை இயக்கி இருக்கிறார்.
24
அதர்வா நடித்த டிஎன்ஏ
டிஎன்ஏ திரைப்படத்தில் நடிகர் அதர்வாவுக்கு ஜோடியாக மலையாள நடிகை நிமிஷா சஜயன் நடித்துள்ளார். மேலும் பாலாஜி சக்திவேல், ரமேஷ் திலக், விஜி சந்திரசேகர், ரித்விகா, கருணாகரன், போஸ் வெங்கட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் பாடல்களை 5 இசையமைப்பாளர்கள் கம்போஸ் செய்துள்ளனர். பின்னணி இசையை ஜிப்ரான் அமைத்துள்ளார். இப்படத்தை அம்பேத் குமார் தயாரித்துள்ளார். ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் தான் இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை கைப்பற்றி இருக்கிறது.
34
பாசிடிவ் விமர்சனங்களை பெற்ற டிஎன்ஏ
தனுஷின் குபேரா போன்ற பிரம்மாண்ட படத்துடன் டிஎன்ஏ திரைப்படம் மோதுவதால் இப்படம் எப்படி இருக்குமோ என்கிற பேச்சு இருந்தது. ஆனால் அதையெல்லாம் தவிடுபொடி ஆக்கும் வகையில் தரமான திரில்லர் படமாக உள்ளதாக ரிலீஸ் முன்பே பாசிடிவ் விமர்சனங்களை பெறத் தொடங்கியது டிஎன்ஏ. அதர்வாவின் கம்பேக் படமாக இது இருக்கும் என்றும் பல விமர்சகர்கள் கூறினார்கள். இந்த மாதம் தமிழ் சினிமாவை காப்பாற்றும் படமாக டிஎன்ஏ இருக்கும் என்றெல்லாம் கூறப்பட்டது. இதனால் இப்படம் வசூலிலும் பெரியளவில் சோபிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் டிஎன்ஏ படத்தின் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் படு சுமாராக உள்ளது. படம் நன்றாக இருந்தும் அதைப்பார்க்க மக்கள் வரவில்லை. நேற்று குபேரா படத்தை பார்க்கவே பெரும்பாலானவர்கள் ஆர்வம் காட்டியதால், டிஎன்ஏ திரைப்படம் முதல் நாளில் தமிழ்நாட்டில் மட்டும் வெறும் ரூ.43.79 லட்சம் தான் வசூலித்துள்ளதாக சினிடிராக் தரவுகள் தெரிவிக்கின்றன. மறுபுறம் குபேரா திரைப்படம் 3.5 கோடி வசூலித்து தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸில் முதலிடம் பிடித்துள்ளது. இன்றும் நாளையும் விடுமுறை தினங்கள் என்பதால் டிஎன்ஏ திரைப்படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் பிக் அப் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.