பிரபல இயக்குனரை ‘குட்டிச்சுவரா போன டைரக்டர்’னு சொன்ன மிஷ்கின்! ஆக்‌ஷன் எடுக்க கோரி இயக்குனர் சங்கத்தில் புகார்

Published : Nov 15, 2022, 01:48 PM IST

உதயநிதி நடித்துள்ள கலகத் தலைவன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பிரபல இயக்குனர் அநாகரிகமாக மிஷ்கின் மீது பரபரப்பு புகார் ஒன்று கொடுக்கப்பட்டு உள்ளது.

PREV
14
பிரபல இயக்குனரை ‘குட்டிச்சுவரா போன டைரக்டர்’னு சொன்ன மிஷ்கின்! ஆக்‌ஷன் எடுக்க கோரி இயக்குனர் சங்கத்தில் புகார்

தமிழ் திரையுலகில் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக்கும் இயக்குனர்களில் ஒருவர் மிஷ்கின். யுத்தம் செய், அஞ்சாதே, பிசாசு என பல்வேறு பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்துள்ள இவர் தற்போது பிசாசு படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி முடித்துள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் மற்றும் பின்னணி பணிகள் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

24

இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்னர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள கலகத் தலைவன் படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குனர்கள் சுந்தர் சி, மாரி செல்வராஜ், மிஷ்கின், எம்.ராஜேஷ், அருண்ராஜா காமராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.

இதையும் படியுங்கள்... ரஜினி, கமல் முதல் சூர்யா வரை... மகேஷ் பாபுவின் தந்தை மறைவுக்கு இரங்கல் தெரிவித்த கோலிவுட் நட்சத்திரங்கள்

34

இந்த விழாவில் மிஷ்கின் பேசுகையில், உதயநிதி தனது டைரக்‌ஷனில் தான் முதலில் அறிமுகமாவதாக இருந்ததாகவும், இதற்காக அவரை விதவிதமாக போட்டோஷூட் எடுத்து யுத்தம் செய் படத்தில் நடிக்க வைக்க திட்டமிட்டிருந்த சமயத்தில் தான் ராஜேஷ் மாதிரியான குட்டிச்சுவராய் போன டைரக்டரின் படத்தில் நடிக்க சென்றுவிட்டார் என பேசி இருந்தார். உதயநிதியில் ஒருகல் ஒரு கண்ணாடி படத்தை இயக்கிய ராஜேஷ் மேடையில் இருக்கும்போதே மிஷ்கின் இவ்வாறு அநாகரிகமாக பேசியது பலருக்கும் முகசுளிப்பை ஏற்படுத்தியது.

44

அவரின் இந்த பேச்சை ராஜேஷ் பெரிதுபடுத்தாவிட்டாலும், அவரது உதவி இயக்குனர்கள் மிஷ்கினுக்கு எதிராக இயக்குனர்கள் சங்கத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார்களாம். அந்த புகாரில் மிஷ்கின் இவ்வாறு பேசியதற்காக இயக்குனர் எம்.ராஜேஷிடம் நேரில் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர். இந்த விவகாரம் தற்போது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படியுங்கள்... வருமா.. வராதானு குழப்பத்தில் சிக்கி தவிக்கும் வாரிசு! துணிவுடன் இறங்கி கூலாக தியேட்டர்களை புக் பண்ணும் உதயநிதி

click me!

Recommended Stories