நடிகர் விஜய் நடித்துள்ள வாரிசு படமும், அஜித் நடித்துள்ள துணிவு படமும் வருகிற பொங்கல் பண்டிகைக்கு ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. 9 ஆண்டுகளுக்கு பின் விஜய், அஜித் நடித்துள்ள படங்கள் ஒரே நாளில் திரைகாண உள்ளதால் ரசிகர்களும் இப்படத்தைக் காண ஆவலோடு காத்திருக்கின்றனர். இப்படங்களுக்கான ரிலீஸ் பணிகளும் ஒருபுறம் மும்முரமாக நடந்து வந்தது.
24
இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்னர் தெலுங்கு தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பால் வாரிசு பட ரிலீசில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. வாரிசு படத்தை தமிழைப் போல் தெலுங்கிலும் பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்த நிலையில், சங்கராந்தி பண்டிகைக்கு தெலுங்கு படங்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என தெலுங்கு தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது.
வாரிசு நேரடி தெலுங்கு படம் இல்லை என்பதால் இப்படத்திற்கு அங்கு குறைவான தியேட்டர்களே கிடைக்கும் சூழல் உருவாகி உள்ளது. இதனால் இப்படத்தின் ரிலீஸ் தேதியை ஜனவரி 26-ந் தேதிக்கு தள்ளிவைத்துவிடலாமா என்கிற பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
44
இவ்வாறு வாரிசு படம் வருமா வராதானு ஒருபக்கம் குழப்பம் நீடித்து வர, மறுபுறம் அஜித்தின் துணிவு படத்தின் வேலை படு ஜோராக நடைபெற்று வருகிறது. இப்படத்தை தமிழகத்தில் வெளியிடும் உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் தற்போது தியேட்டர்களை புக் செய்யும் பணிகளை தொடங்கிவிட்டது. இதனால் அதிகளவிலான தியேட்டர்கள் துணிவு படத்துக்கு கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.