உதயநிதி தயாரிக்கும் படத்தில் சம்பளமே வாங்காமல் பணியாற்றும் கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம் - காரணம் என்ன?

Published : Nov 15, 2022, 10:56 AM IST

ராஜ்கமல் பிலிம்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து உதயநிதி தயாரிக்கும் படத்தில் மணிரத்னமும், கமல்ஹாசனும் சம்பளமே வாங்காமல் பணியாற்றுகிறார்களாம்.

PREV
14
உதயநிதி தயாரிக்கும் படத்தில் சம்பளமே வாங்காமல் பணியாற்றும் கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம் - காரணம் என்ன?

திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் தமிழ் சினிமாவில் உதயநிதி ராஜ்ஜியம் தான் என சொல்லும் அளவுக்கு, கடந்த ஒன்றரை ஆண்டுகளில் எக்கச்சக்கமான படங்களை அவரின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் தான் வெளியிட்டுள்ளது. படங்களை வெளியிடுவது மட்டுமின்றி மறுபுறம் தயாரிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார் உதயநிதி.

24

அந்த வகையில், அவரது தயாரிப்பில் தற்போது மாமன்னன் திரைப்படம் தயாராகி வருகிறது. மாரிசெல்வராஜ் இயக்கும் இப்படத்தில் உதயநிதி தான் ஹீரோவாக நடித்து வருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க, வில்லனாக பகத் பாசில் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி நகைச்சுவை நடிகர் வடிவேலுவும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார்.

இதையும் படியுங்கள்... பிக்பாஸில் காதல் மன்னனாக வலம் வரும் போட்டியாளரிடம் ஓப்பனாக காதலை சொன்ன ஷிவின் - இதென்ன புது டுவிஸ்டா இருக்கு

34

இதையடுத்து உதயநிதி தயாரிப்பில் உருவாக உள்ள பிரம்மாண்ட படைப்பு தான் கமல்ஹாசனின் 234-வது படம். மணிரத்னம் இயக்கத்தில் தயாராக உள்ள இப்படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவீஸ், கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் மற்றும் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் ஆகிய மூன்று நிறுவனங்களும் சேர்த்து தயாரிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

44

இந்நிலையில், சமீபத்திய தகவல்படி இப்படத்தில் மணிரத்னமும், கமல்ஹாசனும் சம்பளமே வாங்காமல் பணியாற்ற உள்ளார்களாம். ஏனெனில் இப்படத்தின் அவர்கள் இருவரும் பார்ட்னராக இருப்பதனால் வரும் லாபத்தில் இருந்து குறிப்பிட்ட சதவீத தொகையை பெற்றுக்கொள்ள உள்ளார்களாம். மணிரத்னம் பொன்னியின் செல்வனுக்கும் அவ்வாறு தான் செய்திருந்தார். அப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றிபெற்றதால் அப்படத்தின் மூலம் அவருக்கு மிகப்பெரிய அளவிலான தொகை கிடைத்தது. அதனால் கமல் படத்துக்கும் அதே பார்முலாவை பின்பற்றுகின்றார்.

இதையும் படியுங்கள்... பிக்பாஸ் வீட்டுக்கு வந்தீங்களா.. இல்ல பிக்னிக் வந்தீங்களா! ராபர்ட் மாஸ்டரை வறுத்தெடுக்கும் ஜனனி- வைரல் புரோமோ

click me!

Recommended Stories