கோலிவுட் திரையுலகில், முன்னணி நடிகராக இருக்கும் ஆர்யா, கடந்த 2005 ஆம் ஆண்டு 'அறிந்தும் அறியாமலும்' திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர். மேலும் அறிமுகமான முதல் படத்தில் சிறந்த அறிமுக நடிகருக்கான ஃபிலிம் ஃபார் விருதையும் பெற்றார். இதைத்தொடர்ந்து உள்ளம் கேட்குமே, ஒரு கல்லூரியின் காதல், கலாப காதலன், பட்டியல், வட்டாரம், ஓரம் போ, என ஒரே மாதிரியான கதைகளை தேர்வு செய்து நடிக்காமல் தன்னுடைய நடிப்பு பசிக்கு தீனி போடும் வகையில், திரைப்படங்களை தேர்வு செய்து நடித்தார்.