அஜித்தின் இந்த ஆசை மற்றும் கண்டிஷனை கேட்ட லைக்கா தயாரிப்பு நிறுவனம் தற்போது அவசர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது. ஏனெனில் இப்போது படத்தை ஆரம்பித்தாலும் குறிப்பிட்ட காலத்திற்குள் படப்படிப்பை முடித்து விட முடியுமா என குழம்பிபோயுள்ளனர்.
தற்போது, விஜய்யின் ''லியோ'' படத்தின் படப்பிடிப்பு தற்போது படு ஜோராக நடைபெற்று வருகிறது. மே மாத இறுதிக்குள் முழு படப்பிடிப்பையும் முடித்துவிட்டு அடுத்த கட்ட பணிகளை ஆரம்பிக்க இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மும்முரம் காட்டி வருகிறார். இந்தகைய சூழலில் இரு படங்களும் மோதுவது எப்படி சாத்தியம் என்பது தெரியவில்லை. ஆனாலும் மீண்டும் ஒரு நேருக்குநேர் வெளியானால் கோலிவுட்டில் கொண்டாட்டம் தான்.