அட்லீ இயக்கத்தில் வெளியான 'ராஜா ராணி' படத்தில் காமெடி நடிகரான அறிமுகமான அருண்ராஜா காமராஜ், அதன் பின்னர் 'மரகதா நானாயம்', 'நட்புனா என்னானு தெரியுமா' மற்றும் சமீபத்திய 'கா பெ ரணசிங்கம்' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

ஒரு பாடலாசிரியராகவும் பாடகராகவும் ரஜினிகாந்தின் கபாலி படத்தில் இடம்பெற்ற 'நெருப்புடா நெருங்குடா' பாடல் வரிகளை எழுதி உலக அளவில் பிரபலமானவர். அதே போல் விஜய் நடித்த 'பைரவா' படத்தில் 'வர்லாம் வா' பாடலை எழுதியவரும் இவர் தான்.

சிவகார்த்திகேயனின் கல்லூரி கால நண்பரான இவர், இவர் தயாரித்து நடித்த, பெண்கள் கிரிக்கெட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்ட 'கனா' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் காயகியாக நடித்தார். அருண்ராஜாவின் முதல் படமே வணிக ரீதியான வெற்றியை கண்டார்.

தற்போது உதயநிதி ஸ்டாலினுடன் முக்கிய கதாபாத்திரத்தில் 'Article 15' என்கிற படத்தை தமிழ் ரீமேக்கை செய்து இயக்கி வருகிறார். ஈடுசெய்ய முடியாத இழப்பை செய்திருக்கும் அருண்ராஜா காமராஜுக்கு ரசிகர்கள் தங்களது வருத்தத்தை தெரிவித்து வருகிறார்கள்.

இந்த படத்தின் வேலைகளில் பிசியாக இறங்கிய போது, கொரோனாவின் இரண்டாவது அலை தீவிரமாகியதால், அனைத்து பணிகளும் முடங்கியது. மேலும் ஃபேஷன் டிசைனரான, இவரது மனைவி சிந்துஜாவிற்கு கொரோனா தொற்று ஏற்பட்டு தொடர்ந்து சிகிச்சையில் இருந்து வந்தார்.

மூச்சி விடுவதில் சிரமம் ஏற்பட்டதால் உடனடியாக இவரை, குடும்பத்தினர் சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். உடல் நிலை மோசமாகிக்கொண்டே சென்றதால் சிந்துஜா ஐ.சி.யூ வார்டில் அனுமதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

மேலும் இவருக்கு தொடர்ந்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்த போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் திரையுலகினர் மத்தியில் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அருண்ராஜா காமராஜின் வெற்றிக்கு உறுதுணையாக அவரது மனைவி இருந்தது திரையுலகை சேர்ந்த பலரும் அறிவார்கள். மேலும் இவரது மறைவிற்கு, சமூக வலைத்தளம் மூலம் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.

இந்த சோகத்தில் இருந்து அருண் ராஜாகாமராஜ் மீண்டு வருவதற்குள், அருண் ராஜாகாமராஜின் சகோதரரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறாராம். விரைவில் இவர் குணமடைய வேண்டும் என பலர் பிராத்தனை செய்து வருகிறார்கள்.