விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படத்தை டாக்டர் பட இயக்குனர் நெல்சன் திலீப் குமார் உருவாக்கி இருந்தார். தெலுங்கு நாயகி பூஜா ஹெக்டே முக்கிய ரோலில் நடித்திருந்த இந்த படத்தில் விஜய் ராணுவ வீரராக வந்து ரசிகர்களை கவர்ந்த போதிலும் படம் கலவையான விமர்சனங்களையே பெற்றிருந்தது. இதை தொடர்ந்து தற்போது ரஜினியின் ஜெயிலர் படத்தில் இணைந்துள்ளார் நெல்சன் திலீப் குமார்.
25
rajini 169
பீஸ்ட் படத்தின் போதே இதற்கான ஒப்பந்தம் ரெடியாகிவிட்டது. இந்த படத்தையும் சன் பிக்சர்ஸ் தான் தயாரிக்கிறது. இதிலும் அனிருத் தான் இசையமைப்பாளர். இந்த படத்தின் மோஷன் போஸ்டர் முன்னதாக வெளியாகி இருந்தது. சூப்பர் ஸ்டார், அனிருத், நெல்சன் மூவரும் கருப்பு வண்ணக் கோட் சூட்டில் ஹெட்றிக் போஸ் கொடுத்திருந்தனர். இந்த வீடியோ ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. தற்போது படத்தின் படப்பிடிப்பும் துவங்கி விட்டது.
முன்னதாக டைட்டில் லுக் போஸ்டரும் வெளியாகி இருந்ததை தொடர்ந்து படத்தில் இணையும் ஒவ்வொரு நடிகர்கள் குறித்த தகவலும் வெளியாகி வருகிறது. அதன்படி ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார், வசந்த் ரவி, யோகி பாபு, ரம்யா கிருஷ்ணன், மலையாள நடிகர் விநாயகம் உள்ளிட்டோர் இடம்பெறுவது முன்னதாகவே உறுதியாகிவிட்டது.
45
Image: Official film poster
இந்த படத்திற்கான வசனங்களை பிரபல இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் எழுதுகிறார். ஒளிப்பதிவை விஜய் கார்த்திக் கண்ணன் மேற்கொள்ள எடிட்டிங்கை ஆர் நிர்மல் பார்த்துக் கொள்கிறார். ஒவ்வொரு மொழியிலிருந்தும் ஒவ்வொரு நடிகர்களை தேர்வு செய்துள்ள ஜெயிலர் பட குழு தற்போது கலை இயக்குனரையும் முடிவு செய்துள்ளது. பிரபல கலை இயக்குனரான கிரன் தான் இந்த படத்திற்காக பணிபுரிய உள்ளார்.
55
jailer
இவர் ஏற்கனவே அநேகன், பாயும் புலி, வேதாளம், காப்பான், வலிமை உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். அதோடு கலை இயக்குனராக காப்பான், டாக்டர், பீஸ்ட் உள்ளிட்ட படங்களில் பணியாற்றியுள்ளார். ரஜினிகாந்த் உடன் இவர் இருக்கும் புகைப்படம் ட்ரெண்டாகி வருகிறது.