Archana Chandhoke Explanation about Suicide attempt Rumours : பிரபல தொகுப்பாளினி அர்ச்சனா, தற்கொலை முயன்றதாக வெளியான தகவலை தொடர்ந்து, இதுகுறித்து யாரும் எதிர்பாராத விளக்கம் ஒன்றை கொடுத்துள்ளார்.
சன் டிவியில் ஒளிபரப்பான 'காமெடி டைம்' நிகழ்ச்சி மூலம், பிரபலமான தொகுப்பாளராக அறியப்பட்டவர் அர்ச்சனா சந்தோகி. இந்த நிகழ்ச்சியில் பணியாற்றியபோது, சில திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தாலும்... அதை நிராகரித்துவிட்டு, தன்னுடைய காதலரான வினீத் முத்துகிருஷ்ணன் என்பவரை 2004-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு தற்போது ஜாரா வினீத் என்கிற மகள் ஒருவரும் உள்ளார்.
26
பிசியாக வலம் வரும் அர்ச்சனா:
திருமணம் ஆனால், தொகுப்பாளினிகளுக்கு வாய்ப்பு கிடைக்காது என்கிற எண்ணத்தை மாற்றி காட்டியவர் அர்ச்சனா. 40 வயதை கடந்து விட்ட போதிலும், இவர் தொகுத்து வழங்கி வரும் சரி கம பா, சூப்பர் மாம், உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
36
டாக்டர் திரைப்படம்:
தொகுப்பாளினி என்பதை தாண்டி, சிவகார்த்திகேயன் நடித்த 'டாக்டர்' திரைப்படத்தில் தன்னுடைய மகளுடன் நடித்திருந்தார். அதே போல் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியிலும், கலந்து கொண்டு திறமையாக விளையாடினார். பல விஷயங்களை இவர் சென்டிமென்ட்டோடு விளையாடியது ரசிகர்களை கவர்ந்தாலும்... அன்பு கேங் என இவர் தன்னை சுற்றி வளைத்து கொண்ட கூட்டம் இவருக்கு மைனஸாக மாறி, இவரே வெளியேறும் நிலைமையை உருவாக்கி கொடுத்தது.
46
அர்ச்சனாவுக்கு நடந்த ஆபரேஷன்:
கடந்த 2021-ஆம் ஆண்டு இவருக்கு மூளையில் ஏற்பட்ட பிரச்சனைக்காக மேஜர் சர்ஜரி செய்யப்பட்டது. அதாவது “Cerebrospinal fluid leak” பிரச்சனைக்காக இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நிலையில், வெற்றிகரமாக அதில் இருந்து மீண்டு தற்போது மீண்டும் சின்னத்திரை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க ஆரம்பித்துள்ளார். மேலும் அவ்வப்போது தன்னை பற்றியும் தன்னுடைய குடும்பத்தை பற்றியும் சில பேட்டிகளில் அர்ச்சனா கூறி வருவதையும் பார்க்க முடிகிறது.
56
அர்ச்சனா கொடுத்த பேட்டி :
கடந்த ஆண்டு, அர்ச்சனா ஒரு பேட்டியில்... ஒரு கட்டத்தில் மன உளைச்சல் காரணமாக தன்னுடைய கணவருடன் தினமும் சண்டை வந்து கொண்டிருந்தது. எனவே இருவரும் விவாகரத்து செய்து பிரிந்துவிடலாம் என முடிவெடுத்தோம். அப்போது எண்களின் மகள் இருவரையும் அழைத்து பேசினார். இருவரும் ஒருவொருக்கொருவர் அன்பை உணர்ந்த தருணம் அது. எல்லா பிரச்னையும் அப்படியே விட்டுவிட்டு ஒன்று சேர்ந்துவிட்டோம் என உணர்ச்சி பெருக்கோடு கூறி இருந்தார்.
66
தற்கொலைக்கு முயன்றாரா?
இதெல்லாம் ஒருபுறம் இருக்க, யுடியூப் சேனல் ஒன்று, அர்ச்சனா அவருடைய கணவருடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக தற்கொலைக்கு முயன்றதாக வீடியோ ஒன்றை வெளியிட்ட நிலையில், இதற்க்கு பதிலடி கொடுத்த அர்ச்சனா, "நான் தற்கொலையெல்லாம் செய்து கொள்ள மாட்டேன். என் கணவருடன் பிரச்சனை வந்தால் நான் தான் அவரை அடிப்பேன் என... யாரும் எதிர்பாராத பதிலடி கொடுத்துள்ளார். இந்த தகவல் வைரலாகி வருகிறது.