ஏ.ஆர்.ரகுமான் ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு செய்ததற்கான ஆதாரங்கள் உள்ளது..! உயர்நீதிமன்றத்தில் ஜிஎஸ்டி ஆணையர் பதில் மனு!

First Published | Sep 28, 2022, 7:20 PM IST

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ஜி.எஸ்.டி வரி ஏய்ப்பு செய்ததற்கான ஆதாரங்கள் உள்ளதாலேயே இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது என மத்திய அரசின் ஜிஎஸ்டி ஆணையர் தரப்பில் பதில் மனு அளிக்கப்பட்டுள்ள விவகாரம் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

தென்னிந்திய திரையுலகில் உள்ள முன்னை இசையமைப்பாளர்களில் ஒருவர் இசை புயல் ஏ .ஆர்.ரகுமான். இவர் ஜிஎஸ்டி வரியை செலுத்தாமல் மோசடி செய்ததாக கூறி ரூ.6.79 கோடி வரி மற்றும் ரூ.6.79 கோடி அபராதம் செலுத்தக் ஜிஎஸ்டி ஆணையம் அவருக்கு கடந்த 2019ம் ஆண்டு நோட்டீஸ் அனுப்பிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த நோட்டீஸுக்கு எதிராக ஏ.ஆர்.ரகுமான் தரப்பில் இருந்து எதிர் மனு தாக்கல் செய்யப்பட்டது. 
 

அந்த மனுவில் ,  ரூ.6.79 கோடி வரி மற்றும் ரூ.6.79 கோடி அபராதம் செலுத்தக் ஜிஎஸ்டி ஆணையம் கூறுவது சட்டவிரோதமானது என்றும், ஒரு படத்தின் இசை படைப்புகளின் காப்புரிமை படத்தின் தயாரிப்பாளருக்கு சொந்தமான பின், அதற்காக தன்னிடம் வரி வசூலிப்பது சட்டவிரோதமானது என தெரிவித்திருந்தார். மேலும் இந்த நோட்டீஸ் தன்னுடைய புகழுக்கு களங்கம் விளைவிக்கும் விதத்தில் உள்ளதாக தெரிவித்திருந்தார்.

மேலும் செய்திகள்: வாயடைத்து போக வைக்கும் தனுஷின் பர்ஃபாமென்ஸ்... பிரபலம் வெளியிட்ட 'நானே வருவேன்' முதல் விமர்சனம் இதோ..!
 

Tap to resize

மேலும் ஒரு படத்திற்கு இசையமைக்கும் இசையமைப்பாளர், அந்த படத்தின் இசைக்கான காப்புரிமையை முழுமையாக தயாரிப்பாளருக்கு வழங்கி விட்டால் அதற்காக சேவை வரியில் விலக்கு அளிக்கும் முறை நடைமுறையில் உள்ளது. ஆனால் ஏ.ஆர்.ரகுமான் முழுமையாக காப்புரிமையை வழங்குவது இல்லை, அதற்காக 6 கோடியே 79 லட்ச ரூபாய் சேவை வரி செலுத்த வேண்டும் என  நோட்டீசில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
 

இந்த வழக்கு கடந்த 3 வருடங்களாக நடந்து வந்த நிலையில், இந்த மனுவை தள்ளுபடி செய்யவேண்டும் என பதில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் இதற்க்கு பதிலளித்துள்ள மத்திய அரசின் ஜிஎஸ்டி ஆணையர், ஏ.ஆர்.ரகுமான் வரி ஏய்ப்பு செய்ததாக கிடைத்த ஆதாரங்கள் கிடைத்ததன் அடிப்படையிலேயே நோட்டீஸ் அனுப்பப்பட்டதாகவும், அவரது புகழை களங்கப்படுத்தும் நோக்கம் ஏதும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஜி.எஸ்.டி. புலனாய்வு பிரிவு சேகரித்த தகவலின் அடிப்படையிலேயே வரி விதிக்கப்பட்டதாகவும், அதை செலுத்தாததால் ரூ.6 கொடியே 79 அபராதமும் விதிக்கப்பட்டதாகவும் பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தற்போது மீண்டும் தமிழ் திரையுலகில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்: 71 வயது நடிகருக்கு ஜோடியாகிறாரா ஜோதிகா..? ஜோதிகாவின் அடுத்த படம் குறித்து வெளியான தகவல்..!
 

Latest Videos

click me!