காமெடி நடிகராக இருந்து நாயகனாக உருவெடுத்துள்ளார் நடிகர் சூரி. பிரபல நடிகர்களுக்கு நண்பனாக வந்த சூரிய தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை படத்தில் நாயகனாக நடித்த வருகிறார்.இதில் விஜய் சேதுபதி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
24
viduthalai shooting spoot
தனக்கு கிடைத்த கதாபாத்திரத்தை எந்த விதத்திலும் கைநழுவ விடக்கூடாது எனும் மன உறுதியில் இருக்கும் சூரி இதற்காக தனது முழு உழைப்பையும் கொடுத்து வருகிறாராம். உடல் மாற்றம் உள்ளிட்ட பலகட்ட முயற்சிகளையும் எடுத்துள்ளார்.
சமீபத்தில் கூட படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்தில் இவருக்கு காயம் ஏற்பட்டிருக்கிறது. இருந்தும் அவற்றையெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் மீண்டும் தனது படப்பிடிப்பை தொடங்கியுள்ளார். ஜாக்கிஜான் ரேஞ்சுக்கு பைட், மிகப்பெரிய கிராம செட் என பிரமாண்டமாக உருவாக்கி வருகிறது விடுதலை.
மலைவாழ் மக்கள் மற்றும் போலீஸ் தொடர்பான கதைகளத்தை கொண்டுள்ள இதில் சூரி போலீஸ் வேடத்தில் நடித்துள்ளார். படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு விரைவில் நடைபெறும் என்று படம் வெளியாகும் தேதியும் அறிவிக்கப்படும் என்றும் தகவலை உண்டு.
இந்நிலையில் சூரி அடுத்ததாக மதயானை கூட்டம் படத்தை இயக்கிய இயக்குனர் விக்ரம் சுகுமாருடன் ஒரு புதிய திட்டத்தில் இணைந்துள்ளார். இந்த திட்டம் வெப் சீரிஸ் என்றும் அதி ஓடிடியில் திரையிடப்படும் என்றும் கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.