தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த கிரண், தற்போது வயது அதிகரித்து விட்டதாலும், உடல் எடை கூடியதாலும் பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வருகிறார்.
பட வாய்ப்பை கைப்பற்ற, விதவிதமான கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட துவங்கிய இவருக்கு, பின்னர் இதையே ஒரு சைடு பிஸ்னஸ் ஆக செய்து கொண்டிருக்கிறார். தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதற்கு என்றே ஆப் ஒன்றை உருவாக்கி அதில், கலக்கலான கவர்ச்சி புகைப்படங்கள் மூலம் சந்தாதாரர்களுக்கு தரிசனம் கொடுத்து வருவதாக கூறப்படுகிறது.
உடல் எடையை எப்படி குறைத்தேன் என்கிற ரகசியத்தையும் பகிர்ந்து கொண்டுள்ள கிரண்... இது குறித்து போட்டுள்ள பதிவில்... 82 கிலோ எடையில் இருந்து, தற்போது 62 கிலோவை எட்டியுள்ளேன். இதற்கான பயணம் மிகவும் கடினமாக இருந்தது.
எடை குறைப்பு செய்து சிக்ஸ் பேக்குக்குமாடியுள்ளார். சரியாக சாப்பிடுவது உணவுக் கட்டுப்பாடு அல்ல இது ஒரு வாழ்க்கைமுறையாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை சாப்பிடுவது எனக்கு நன்கு கைகொடுத்தது. எனது வளர்சிதை மாற்ற விகிதத்தை வேலை செய்தேன் கஸ்டமைஸ் உணவு இல்லை.. ஃபேன்ஸி டயட் இல்லை. வீட்டு உணவு மட்டுமே என தெரிவித்துள்ளார். இவரது இந்த பதிவும், இதில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படமும் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.