
சினிமாவில் இப்போது விவாகரத்து செய்தி அதிகரித்து வருகிறது. ஏற்கனவே இந்த ஆண்டில் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தன்னுடைய மனைவி சைந்தியாவை விவாகரத்து செய்தார். அதன் பிறகு சமீபத்தில் நடிகர் ஜெயம் ரவி தன்னுடைய மனைவி ஆர்த்தியை பிரிந்ததாக அறிவித்தார். இந்த நிலையில் உலகின் முதன்மை இசையமைப்பாளரான ஏ ஆர் ரகுமான் மற்றும் சாய்ரா பானு இருவரும் பிரிந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
கடந்த 1995 ஆம் ஆண்டு சாய்ரா பானு மற்றும் ஏஆர் ரகுமான் இருவரும் பெற்றோர்கள் முன்னிலையில் திருமணம் செய்தனர். இதைத் தொடர்ந்து இவர்களுக்கு 2 மகள் மற்றும் ஒரு மகன் பிறந்தனர். திருமணமாகி 29 ஆண்டுகள் கடந்த நிலையில் சாய்ரா பானு தனது கணவரை பிரிவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். உணர்ச்சிப்பூர்வமான அழுத்தத்திற்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு. என்னதான் ஒருவரையொருவர் ஆழமாக நேசித்தாலும் வலியும், வேதனையுடனும் தான் இந்த முடிவு எடுக்கப்பட்டது என்று கூறினார். இதே போன்று தான் இசையமைப்பாளர் ஏஆர் ரகுமானும் எக்ஸ் பக்கத்தில் கூறியிருந்தார்.
மீண்டும் தனுஷை சீண்டி பார்ப்பது போல் நயன்தாரா வெளியிட்ட 3 பக்க அறிக்கை!
ஏஆர் ரகுமானின் மகன் அமீன் இந்த தருணத்தில் அனைவரையும் கேட்பது என்னவென்றால் எங்களது தனியுரிமையை மதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அதே போன்று மகள் ரகுமானின் மகள் கஜீதாவும் ரகுமானின் பதிவை தனது எக்ஸ் பக்கத்தில் ஷேர் செய்து கும்பிடு போட்டுள்ளார். இப்போது ஏஆர் ரகுமானின் இந்த விவாகரத்து செய்திதான் உலகம் முழுவதும் பேசப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தான் ஏ ஆர் ரகுமானின் இசை குழுவில் ஒருவராக பணியாற்றி வரும் மோகினி டேவும் தன்னுடையகணவர் மார்க் ஹார்ட்சுச்சை பிரிந்து விட்டதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். கொல்கத்தாவைச் சேர்ந்தவர் மோகினி டே. இவர் ஒரு இந்திய பாஸ் பிளேயர். 3 வயது முதல் இசை மீதான ஆர்வத்தை வெளிப்படுத்தி வந்துள்ளார். 10 வயதில் தனது முதல் பேஸ் கித்தாரை பெற்றார். 11ஆவது வயதில் தான் ஒரு சிறந்த கித்தாரிஸ்ட் என்பதை நிரூபித்தார்.
நாக சைத்தாயாவுக்கு முன் பிரபல தொழிலதிபரை காதலித்த சோபிதா! யார் அவர்?
2023 ஆம் ஆண்டு முதல் இசை ஆல்பத்தை வெளியிட்டார். சிறந்த இசையமைப்பாளராகவும், தயாரிப்பாளராகவும், பாடலாசிரியர், பின்னணி பாடகர் என்று பன்முக கலைஞராக திகழ்கிறார். எப்போதும் சமூக வலைதள பக்கத்தில் சுறுசுறுப்பாகவே இருக்கிறார். இவரை இன்ஸ்டாவில் மட்டும் 522k பேர் பின் தொடர்கின்றனர்.
இந்த நிலையில் தான் சாய்ரா பானு தன்னுடைய கணவரை விவாகரத்து செய்வதற்கு முன்னதாகவே தனது கணவர் மார்க் ஹார்ட்சுச்சை பிரிந்துவிட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இருவரும் சமரசமாக இந்த முடிவு எடுத்துள்ளோம். இதனை முதலில் எங்களது நண்பர்களுக்கும், குடும்பத்தினருக்கும் தெரியப்படுத்த விரும்புகிறேன்.
எங்களுக்கு இடையில் இருவேறு கருத்து நிலவிய நிலையில் ஒன்றாக இணைந்து பிரிவதாக முடிவு செய்தோம். இனியும் நாங்கள் ஒன்றாக நண்பர்களாக இணைந்து பயணிப்போம். ஒன்றாக பணியாற்றுவோம். உங்களது அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி. எங்களது தனிப்பட்ட உரிமைக்கு மதிப்பளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
அட்ரா சக்க..! கயல் சீரியலில் அதிரடி என்ட்ரி கொடுக்கும் பிரபல வெள்ளித்திரை ஹீரோ!