AR Rahman : மியூசிக்கே இல்லாம ஒரு பாடலா? ஏ.ஆர்.ரகுமான் உருவாக்கிய ‘அந்த’ மாஸ்டர் பீஸ் சாங் பற்றி தெரியுமா?

Published : Jun 26, 2025, 01:00 PM IST

இசைக்கருவிகள் எதுவும் இல்லாமல் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் உருவாக்கிய ஒரு மாஸ்டர் பீஸ் பாடலைப் பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க உள்ளோம்.

PREV
15
AR Rahman Song Secret

இளையராஜாவின் இசைக்கு அடிமையான ரசிகர்களை ஒரே படத்தில் தன் வசம் ஈர்த்தவர் தான் ஏ.ஆர்.ரகுமான். அவர் இயக்கிய முதல் படமான ரோஜா, தமிழ் சினிமாவிற்கு ஒரு டிரெண்ட் செட்டர் படமாகவே அமைந்தது. அந்த படத்தில் தொடங்கிய ரகுமானின் இசைப்பயணம் 30 ஆண்டுகளைக் கடந்தும் வெற்றிநடைபோட்டு வருகிறது. காலத்திற்கு ஏற்றார் போலவும், ரசிகர்களின் ரசனைகளை நன்கு புரிந்துகொண்டு தற்போதைய இளம் தலைமுறையினரையும் தன்னுடைய இசையால் கட்டிப் போட்டு வைத்திருக்கிறார் ஏ.ஆர்.ரகுமான்.

25
ஏ.ஆர்.ரகுமான் - மணிரத்னம் கூட்டணி

ஏ.ஆர்.ரகுமானை சினிமாவில் அறிமுகமானது மணிரத்னம் படம் மூலம் தான். அன்று முதல் இன்று வரை இவர்கள் கூட்டணி தொடர்ந்து பயணித்து வருகிறது. அண்மையில் இவர்கள் கூட்டணியில் வெளிவந்த தக் லைஃப் திரைப்படத்தின் பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. இவர்கள் இருவரும் இணைந்தாலே அப்படத்தின் பாடல்களில் பல்வேறு புதுமைகள் இருக்கும். அப்படி மணிரத்னம் - ஏ.ஆர்.ரகுமான் கூட்டணியில் வந்த ஒரு புதுமையான பாடல் பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க உள்ளோம்.

35
திருடா திருடா பட பாடல் ரகசியம்

ரோஜா படத்தின் அதிரி புதிரியான வெற்றிக்கு பின்னர் ஏ.ஆர்.ரகுமானும், மணிரத்னமும் மீண்டும் இணைந்து பணியாற்றிய திரைப்படம் திருடா திருடா. டாப் ஸ்டார் பிரசாந்த் நாயகனாக நடித்திருந்த இப்படத்தில் அனு அகர்வால், எஸ்பிபி, ஹீரா, சலீம் கோஸ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. இப்படத்திற்கு தேசிய விருதும் கிடைத்தது. சிறந்த ஸ்பெஷல் எஃபெக்ஸுக்கான தேசிய விருதை திருடா திருடா திரைப்படம் தட்டிச் சென்றது.

45
மியூசிக் இல்லாத பாட்டு எது?

திருடா திருடா படம் பெரியளவில் வெற்றியடையாவிட்டாலும் அதன் பாடல்கள் அனைத்தும் பட்டிதொட்டியெங்கும் ஹிட் அடித்தன. இப்படத்தில் தான் எந்தவித இசைக்கருவிகளும் பயன்படுத்தாமல் ஒரு பாடலை கம்போஸ் செய்திருந்தார் ஏ.ஆர்.ரகுமான். அவரின் இந்த முயற்சியை பார்த்து ஒட்டுமொத்த திரையுலகமே ரகுமானை பாராட்டி இருந்தது. அவரின் கெரியரில் சிறந்த பாடலாகவும் அது திகழ்ந்தது. அப்படி ரகுமான் இசைக்கருவிகளே இல்லாமல் உருவாக்கிய அந்தப் பாடல் வேறெதுவுமில்லை... திருடா திருடா படத்தில் இடம்பெறும் ‘ராசாத்தி என் உசுரு எனதில்ல’ என்கிற பாடல் தான்

55
ஜீனியஸ் என நிரூபித்த ரகுமான்

மறைந்த பாடகர் ஷாகுல் ஹமீது தான் இப்பாடலை பாடி இருந்தார். இசைக்கருவிகள் இன்றி எப்படி ஒரு பாடலை உருவாக்க முடியும் என்று தானே யோசிக்கிறீர்கள். அதில் தான் ஒரு ஜீனியஸ் என்பதை நிரூபித்திருக்கிறார் ரகுமான். இசைக்கருவிகள் இல்லாமல் ‘அகபெல்லா’ எனப்படும் பாடகர்களின் கோரஸ் குரலை பின்னணிக்கு பயன்படுத்தி அப்பாடலுக்கு ஒரு தனி அடையாளம் கொடுத்திருந்தார் ரகுமான். இந்தியாவிலேயே முதன்முறையாக இசைக்கருவிகளே இல்லாமல் உருவாக்கப்பட்ட முதல் பாடல் என்கிற பெருமையும் இந்த பாடலுக்கு உண்டு.

Read more Photos on
click me!

Recommended Stories