Anushka Shetty Ready to Reunite With Prabhas : பிரபாஸுடன் மீண்டும் நடிக்க ஆவலுடன் இருப்பதாக நடிகை அனுஷ்கா ஷெட்டி தெரிவித்துள்ளார். மீண்டும் அவரோடு திரையில் இணைந்து நடிக்கும் நாளுக்காக காத்திருப்பதாகவும் அவர் கூறினார்.
‘பாகுபலி’ படத்தின் வெற்றி ஜோடி அனுஷ்கா ஷெட்டி மற்றும் பிரபாஸ் மீண்டும் எப்போது இணைந்து நடிப்பார்கள் என்ற கேள்விக்கு அனுஷ்கா பதிலளித்துள்ளார்.
26
நல்ல கதை அமைந்தால் மீண்டும் பிரபாஸுடன் நடிக்க தயார் என்று அனுஷ்கா கூறியுள்ளார். பிரபாஸுடன் நடிப்பதில் மகிழ்ச்சி. மீண்டும் அவரோடு நடிக்கும் நாளுக்காக காத்திருக்கிறேன்.
36
பாகுபலி போன்ற படத்திற்குப் பிறகு மீண்டும் இருவரும் இணைந்து நடிக்க வேண்டுமென்றால், அந்தப் படம் வித்தியாசமாகவும், சிறப்பாகவும் இருக்க வேண்டும். அப்படி ஒரு கதை வந்தால் நடிக்கத் தயார்.
46
நான் இன்னும் பாகுபலி குழுவினருடன் தொடர்பில் இருக்கிறேன். சமீபத்தில் பாகுபலி 10வது ஆண்டு விழா கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள முடியவில்லை.
56
பாகுபலி படம் குறித்த தனி ஆவணப்படம் தயாராகி வருகிறது. அந்த ஆவணப்படத்தின் படப்பிடிப்பில் நானும் கலந்து கொண்டேன் என்று நடிகை அனுஷ்கா ஷெட்டி கூறினார்.
66
அனுஷ்கா மற்றும் பிரபாஸ் மொத்தம் நான்கு படங்களில் இணைந்து நடித்துள்ளனர். மிர்ச்சி, பில்லா, பாகுபலி 1, பாகுபலி 2 ஆகிய படங்களில் இந்த ஜோடி இணைந்து நடித்தது, அனைத்து படங்களும் சூப்பர் ஹிட்.