இதில் ஒரு தவெக தொண்டர் விஜய் பவுன்சர்கள் தள்ளி விட்டதால் நெஞ்சில் காயம் அடைந்து விட்டதாக கூறி போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் விஜய் மீதும், பவுன்சர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தவெக மாநாட்டில் விஜய் ரசிகர்களின் அடாவடிக்கும், பவுன்சர்களின் செயலுக்கும் நாம் தமிழர் உள்பட பல்வேறு கட்சியினர் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில், அங்காடித் தெரு, வெயில் உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கிய இயக்குநர் வசந்த பாலன், விஜய்யின் தவெகவை விமர்சித்துள்ளார்.
விஜய்யை சீண்டிய வசந்த பாலன்
அதாவது பூக்கி திரைப்பட விழாவில் பங்கேற்று பேசிய அவர், ''அண்மையில் ஒரு அரசியல் மாநாட்டை பார்த்தேன். அதில் பங்கேற்ற இளைஞர்கள் மேடையில் இருந்து தூக்கி வீசப்படுகின்றனர். காலையில் இருந்து வெயிலில் காத்திருந்து கருகினார்கள். அதை பார்க்கும்போது எனக்கு கவலையாக இருந்தது. அந்த இளைஞர்களை அரசியல்படுத்த தவறிவிட்டோமோ என்ற எண்ணம் எனக்குத் தோன்றியது. வேறு திசை நோக்கி அவர்கள் செல்கிறார்கள்'' என்று தெரிவித்து இருந்தார்.