
சமையல் கலைஞரும், தொழிலதிபரும், குக் வித் கோமளி சீசன் 6 நடுவருமான மாதம்பட்டி ரங்கராஜ் பற்றிய செய்திகள் தான் இப்போது அடிக்கடி தலைப்புச் செய்திகளில் வந்து கொண்டே இருக்கிறது. ஏற்கனவே மாதம்பட்டி ரங்கராஜிற்கு வழக்கறிஞர் ஸ்ருதி என்பவருடன் திருமணமாகி 2 மகன்கள் இருக்கும் நிலையில் சமீபத்தில் அவர் ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிசில்டாவை 2ஆவதாக திருமணம் செய்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.
அப்போது அவர் 6 மாதம் கர்ப்பம் என்பது குறிப்பிடப்படத்தக்கது. மாதம்பட்டி ரங்கராஜைப் போன்று ஜாய் கிரிசில்டாவும் ஏற்கனவே திருமணம் ஆனவர். கிரிசில்டா மற்றும் இயக்குநர் ஜே ஜே ஃப்ரெட்ரிக் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு குழந்தை இருக்கும் நிலையில் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதன்பிறகு மாதம்பட்டி ரங்கராஜ் உடன் பழக்கம் ஏற்படவே அவருடன் நெருங்கி பழகி வந்துள்ளார். அதோடு, அவரை காதலிக்கவும் செய்துள்ளார். இருவரும் ஒன்றாகவும் வாழ்ந்து வந்துள்ளனர். இதைத் தொடர்ந்து ஜாய் கிரிசில்டா 6 மாதம் கர்ப்பமான நிலையில் மாதம்பட்டி ரங்கராஜை திருமணம் செய்துள்ளார். இதைத் தொடர்ந்து ஜாய் கிரிசில்டா அடிக்கடி மாதம்பட்டி ரங்கராஜ் உடன் இருக்கும் புகைப்படங்களை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு வந்தார். மேலும் மருத்துவமனை சென்று பரிசோதனை செய்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.
மேலும், தனக்கு பிறக்க போகும் குழந்தைக்கு வைக்க போகும் பெயர் கூட தேர்வு செய்துள்ளார். இந்த சூழலில் தான் மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் அவரது முதல் மனைவி ஸ்ருதி இருவரும் நிகழ்ச்சி ஒன்றில் ஒன்றாக கலந்து கொண்டிருந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த நிலையில் தான் ஜாய் கிரிசில்டா சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
அதில், அவர் கூறியிருப்பதாவது: ரங்கராஜ் தான் எனது கணவர். எம்.ஆர்.சி. நகர் பகுதிநில் உள்ள கோவிலில் திருமணம் செய்து கடந்த இரண்டு ஆண்டுகளாக இணைந்து வாழ்ந்து வந்ததாக தெரிவித்தார். ஆனால் திடீரென கடந்த இரண்டு மாதங்களாக அவர் என்னை விட்டு விலகி விட்டார். என்னிடம் தொடர்பை முற்றிலும் துண்டித்துள்ளதாக கூறினார்.
இப்போது என் வயிற்றில் வளரும் குழந்தைக்கு ரங்கராஜ்-தான் தந்தை, தற்போது 7 மாதம் கர்ப்பமாக இருப்பதாகவும். மாதம்பட்டி ரங்கராஜை நேரில் சந்திக்க முயன்றபோது, இரண்டு முறையும் என்னை அடித்து விரட்டியதாக தெரிவித்தார். மேலும் கருவை கலைக்கும் படி வற்பறுத்தி அடித்ததாகவும் தெரிவித்தார். இதனையடுத்து அவருடன் பேச முயன்றும், அவருடைய நண்பர்கள் என்னை சந்திக்க விடாமல் தடுப்பதாக குற்றம்சாட்டினார். இப்போது என் வயிற்றில் வளரும் குழந்தைக்கு ரங்கராஜ்தான் தந்தை. எனக்கும் என் குழந்தைக்கும் நேர்ந்த இந்த ஏமாற்றத்திற்கு அவர் பொறுப்பேற்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
அவர் என்னுடன் சேர்ந்து வாழ போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்திள்ளார். தன்னை திருமணம் செய்து கொள்ளும் போது தனது மனைவியை விட்டு பிரிந்து இருப்பதாக தெரிவித்ததால் தான் திருமணம் செய்து கொண்டதாக கூறினார். இந்த நிலையில் தான் நடிகரும், பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் அளித்த பேட்டி ஒன்றில் ஜாய் கிரிசில்டா போராடுவது நியாயமற்றது என்றும், அவருக்கு இதில் நீதி கிடைக்காது என்றும் பேசியுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேற்கொண்டு கூறியிருப்பதாவது ஜாய் கிரிசில்டா மற்றும் ஜே ஜே ஃப்ரெட்ரிக் ஆகியோருக்கு பிறந்த குழந்தைக்கு மாதம்பட்டி ரங்கராஜ் தான் அப்பா என்று கையெழுத்து போட்டிருக்கிறார். அதுமட்டுமின்றி ஏற்கனவே 2 முறை ஜாய் கிரிசில்டாவிற்கு அபார்ஷன் (கருத்தரிப்பு) நடந்திருக்கிறது. அதையும் மாதம்பட்டி ரங்கராஜ் சொல்லி தான் செய்திருக்கிறார். இப்போது 3ஆவது முறையாக மாதம்பட்டி ரங்கராஜ் கர்ப்பமாக இருக்கிறார். கருவை கலைக்க சொல்லி அவர் செய்யாததால் இருவருக்கும் இப்போது பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
ஜாய் கிரிசில்டா ஒரு கிழவி. அவருக்கு ரங்கராஜை விட வயது சற்று அதிமகாக கூட இருக்கும். உண்மையில் உன்னுடைய 2ஆவது மனைவியாக நான் இருந்து கொள்கிறேன். நீ கொடுப்பதை கொடு என்று ஜாய் கிரிசில்டா இருந்திருந்தால் அவர்களுக்கு இடையில் பிரச்சனை வந்திருக்காது. இப்போது ஜாய் கிரிசில்டா போராடுவது வேஸ்ட். சட்டப்படி விவாகரத்து நடைபெறவில்லை என்று தெரிந்தும் அவர் எப்படி 2ஆவதாக திருமணம் செய்து கொள்ளலாம் என்றெல்லாம் அவர் கேள்விகள் எழுப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.