மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற, 'பிரேமம்' படத்தில்... மூன்று கதாநாயகிகளில் ஒருவராக நடித்து பிரபலமானவர் அனுபமா பரமேஸ்வரன். இப்படத்தின் மூலம், நாயகியாக அறிமுகமான, சாய் பல்லவி, மடோனா செபாஸ்டியன், மற்றும் அனுபமா ஆகிய மூன்று நடிகைகளுக்குமே திரை உலகில் நல்ல வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து, அனுபமா பரமேஸ்வரன் தமிழில், நடிகர் தனுஷுக்கு ஜோடியாக 'கொடி' படத்தில் அறிமுகமானார்.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இப்படம் படு தோல்வி அடைந்தாலும், அடுத்ததாக நடிகர் அதர்வாவுக்கு ஜோடியாக ' தள்ளி போகாதே' படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் இப்படமும் அவருக்கு எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை, எனவே தமிழில் பட வாய்ப்பு கிடைக்காததால் தெலுங்கு திரையுலகில் கவனம் செலுத்த துவங்கினார்.
விமானத்தில் சக பயணியை துஷ்பிரயோகம் செய்த ஜெயிலர் பட நடிகர் விநாயகன்!
தமிழ் படங்கள் இவருக்கு கை கொடுக்காவிட்டாலும் தெலுங்கில், இவர் நடித்த கார்த்திகேயா 2, ரவுடி பாய்ஸ், உள்ளிட்ட படங்கள் நல்ல வரவேற்பை பெற்று தந்தது. அதேபோல் கன்னடத்தில் நடிகர் புனித் ராஜ்குமார் கடைசியாக நடித்திருந்த 'நடாசர்வபௌமா' திரைப்படத்திலும் நடிகை அனுபமா பரமேஸ்வரன் நடித்திருந்தால், கன்னட திரையுலகில் இவருக்கென மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உருவாகியுள்ளது.
அந்த வகையில் தற்போது கேஷுவல் லுக்கோடு, தன்னுடைய புதிய டாட்டூவையும் ரசிகர்களுக்கு காட்டியுள்ளார். இதயத்திற்கு பக்கத்தில்... நெஞ்சுக்குழிக்கு நேராக குட்டியோடு டாட்டூ ஒன்றை அனுபமா போட்டுள்ள நிலையில், இங்கெல்லாமா டாட்டூ குத்துவீர்கள் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். இந்த ரணகளமான போட்டோஸ் தற்போது ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகிறது.