Bigg Boss Tamil season 8
பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் மாதம் 6-ந் தேதி தொடங்கிய நிலையில், தற்போது 80 நாட்களைக் கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. அந்நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளதால், இந்த வாரம் முழுக்க பிக் பாஸில் ப்ரீஸ் டாஸ்க் நடத்தப்பட்டு வருகிறது. அதில் போட்டியாளர்கள் தங்கள் குடும்பத்தாரை 80 நாட்களுக்கு பின் பார்ப்பதால் பிக் பாஸ் வீடே பாச மழையில் நனைந்து வருகிறது. இந்த டாஸ்கின் இறுதியில் மேலும் ஒரு இன்ப அதிர்ச்சியை கொடுத்தார் பிக்பாஸ்.
Soundariya Propose Vishnu
அதன்படி வெள்ளிக்கிழமை அன்று பிக் பாஸ் போட்டியாளர்களின் நண்பர்களை வீட்டுக்குள் சர்ப்ரைஸாக அனுப்பி வைத்திருக்கிறார்கள். அதன்படி செளந்தர்யாவின் நண்பனான விஷ்ணு விஜய், பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றதும் அவருக்கு புரபோஸ் செய்து அதிர்ச்சி கொடுத்திருக்கிறார் சவுண்டு. அடுத்ததாக அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்த அருண் பிரசாத்தின் காதலியும், கடந்த சீசன் டைட்டில் வின்னருமான அர்ச்சனா ரவிச்சந்திரன் இன்று எண்ட்ரி கொடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்... என்னை கல்யாணம் பண்ணிப்பியா? பிக் பாஸ் பிரபலத்திடம் லவ் புரபோஸ் பண்ணிய செளந்தர்யா
Pavithra, Vishal, Jeffry
இதுதவிர பிரியங்கா தேஷ்பாண்டே, ஈரோடு மகேஷ் என பல பிரபலங்கள் இன்று பிக் பாஸ் வீட்டுக்குள் எண்ட்ரி கொடுக்க உள்ளார்களாம். இதனால் பிக் பாஸ் வீடே களைகட்டி உள்ளது. இந்த வாரம் முழுக்க சண்டை சச்சரவுகள் இல்லாமல் சென்றாலும் வார இறுதியில் மக்கள் அளிக்கும் வாக்குகள் அடிப்படையில் ஒருவர் எலிமினேட் செய்யப்பட உள்ளது உறுதி. அந்த வகையில் அந்த நபர் யார் என்கிற தகவல் தற்போது இணையத்தில் கசிந்துள்ளது.
Anshitha
பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் நடைபெற்ற நாமினேஷனில், அன்ஷிதா, பவித்ரா, ஜாக்குலின், ராணவ், மஞ்சரி, ஜெஃப்ரி, விஷால் ஆகிய 7 பேர் நாமினேட் ஆகி உள்ளனர். இவர்களில் ஓட்டிங் நிலவரப்படி, ஜாக்குலின் தான் முன்னிலையில் இருக்கிறார். இதனால் இந்த வாரம் அவர் காப்பற்றப்படுவது உறுதி. அவருக்கு அடுத்தபடியாக மஞ்சரி, ராணவ் மற்றும் பவித்ராவுக்கு கணிசமான வாக்குகள் கிடைத்துள்ளதால் அவர்களும் எலிமினேட் ஆக வாய்ப்பில்லை.
Anshitha, VJ Vishal
இறுதியாக விஜே விஷால், ஜெஃப்ரி மற்றும் அன்ஷிதா தான் டேஞ்சர் ஜோனில் உள்ளனர். இவர்களில் அன்ஷிதா மற்ற இருவரை விட மிகவும் கம்மியான வாக்குகளை பெற்றுள்ளதால் அவர் இந்த வாரம் எலிமினேட் ஆவது கிட்டத்தட்ட உறுதி. ஒரு வேளை டபுள் எவிக்ஷன் நடைபெற்றால் அதில் அன்ஷிதாவுடன் ஜெஃப்ரி அல்லது விஷால் ஆகிய இருவரில் ஒருவர் எலிமினேட் ஆக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்... அருணை கதறவிட்டு சர்பிரைஸ் கொடுத்த பிக்பாஸ்! பட் ஏமாற்றம் என்னவோ ரசிகர்களுக்கு தான்!