அட குழந்தை நட்சத்திரமாக நடித்த அனிகாவா இப்படி? என ஒட்டு மொத்த ரசிகர்களையும் ஷாக்காக்கும் அளவுக்கு கவர்ச்சியில் புகுந்து விளையாடி வருகிறார் அனிகா சுரேந்திரன். மலையாள திரையுலகில் பல முன்னணி நடிகர்கள் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த அனிகாவை, தமிழில் அறிமுகப்படுத்திய பெருமை இயக்குனர் கெளதம் மேனனை தான் சேரும். இவர் அஜித் - த்ரிஷாவை வைத்து இயக்கிய 'என்னை அறிந்தால்' படத்தில், அஜித்தின் மகளாக நடித்திருந்தார் அனிகா.
குட்டி நயன் என்கிற பெயருக்கு ஏற்றாப்போல், பல படங்களில் நயன்தாராவுடன் இணைந்து நடித்தார் அனிகா. நானும் ரவுடி தான் படத்தில், நயன்தாராவின் சிறிய வயது கதாபாத்திரத்தில் நடித்த அனிகா பின்னர், நயன்தாராவுக்கு மகளாக 'பாஸ்கர் தி ராஸ்கல்' மற்றும் 'விஸ்வாசம்' ஆகிய படங்களில் நடித்தார். குழந்தை நட்சத்திரம் என்பதை தாண்டி, சமீபத்தில், தெலுங்கு மற்றும் மலையாளத்தில் ஹீரோயினாகவும் அடியெடுத்து வைத்து விட்டார்.