Actress who sing most hit songs in Tamil : தமிழ் சினிமாவில் ஹீரோயினாகும் முன் பாடகியாக வலம் வந்த நடிகை ஒருவர் தமிழில் ஜிவி பிரகாஷ், யுவன் சங்கர் ராஜா, அனிருத், ஹாரிஸ் ஜெயராஜ் என பல்வேறு முன்னணி இசையமைப்பாளர்கள் இசையில் பாடி இருக்கிறார். இவர் நடித்த படங்களைக் காட்டிலும் பாடிய பாடல்கள் அதிகம். அதுவும் இவர் பாடினால் அந்த பாடல் கன்பார்ம் ஹிட்டாகிவிடும். மயக்கும் குரலுக்கு சொந்தக்காரியான இந்த நடிகை இதுவரை தமிழில் பாடிய பாடல்களில் பெரும்பாலான சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தன. அந்த பாடகி யார் என்பதை பார்க்கலாம்.
ஆண்ட்ரியா பாடிய ஹிட் பாடல்கள்
அவர் வேறுயாருமில்லை நடிகை ஆண்ட்ரியா ஜெர்மியா தான். இவர் பாடகியாக அறிமுகமான படம் அந்நியன். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்த இப்படத்தில் இடம்பெற்ற சூப்பர் ஹிட் பாடலான ‘கண்ணும் கண்ணும் நோக்கியா’ என்கிற பாடலை ஆண்ட்ரியா தான் பாடி இருந்தார். இதையடுத்து ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் வேட்டையாடு விளையாடு படத்தில் இடம்பெற்ற ‘கற்க கற்க’, ஆதவன் படத்திற்காக ‘ஏனோ ஏனோ’, துப்பாக்கி படத்திற்காக விஜய்யுடன் சேர்ந்து ‘கூகுள் கூகுள்’ பாடல் என ஹாரிஸ் இசையில் இவர் பாடிய பாடல்கள் இன்றளவும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்து உள்ளது.
இதையும் படியுங்கள்... அப்பா பக்கத்தில் இருக்கும் போதே... என் டீ ஷர்டுக்குள் கை விட்டான்! மோசமான அனுபவத்தை கூறிய நடிகை ஆண்ட்ரியா!
இதெல்லாம் ஆண்ட்ரியா பாடிய பாடல்களா?
அதேபோல் யுவன் சங்கர் ராஜா இசையிலும் ஏராளமான ஹிட் பாடல்களை பாடி இருக்கிறார் ஆண்ட்ரியா, குறிப்பாக யாரடி நீ மோகினி படத்தில் வரும் ‘ஓ பேபி ஓ பேபி’ பாடல், சர்வம் படத்தில் இடம்பெற்ற ‘அடடா வா அசத்தலாம்’ பாடல், கோவா படத்தில் ‘இதுவரை’ பாடல், வானம் படத்தில் இடம்பெற்ற ‘நோ மனி நோ ஹனி’ பாடல், பில்லா 2 படத்திற்காக ‘மதுர பொண்ணு’ பாடல், அஞ்சான் படத்தில் இடம்பெற்ற ‘ஏக் தோ தீன் சார்’ போன்ற பாடல்களை எல்லாம் பாடியது நடிகை ஆண்ட்ரியா தான்.
அதிக ஹிட் பாடல்களை பாடிய ஹீரோயின் ஆண்ட்ரியா
யுவன் மட்டுமின்றி ஜிவி பிரகாஷ் இசையிலும் ஏராளமான சூப்பர் ஹிட் பாடல்களை பாடி இருக்கிறார். அதன்படி, ஆயிரத்தில் ஒருவன் படத்தில் வரும் ‘உன்மேல ஆசை தான்’ பாடல், மதராசபட்டினம் படத்தில் இடம்பெற்ற ‘பூக்கள் பூக்கும் தருணம்’ போன்ற பாடல்களை ஆண்ட்ரியா பாடி இருக்கிறார். அதேபோல் அனிருத் இசையில் அவர் வணக்கம் சென்னை படத்திற்காக ‘எங்கடி பொறந்த’ பாடலை பாடினார். அதேபோல் தேவி ஸ்ரீ பிரசாத் இசையில், மன்மதன் அம்பு படத்தில் இடம்பெற்ற ‘Who's The Hero' பாடலை பாடியதும் ஆண்ட்ரியா தான். பின்னர் சந்தோஷ் நாராயணன் இசையில் சூது கவ்வும் படத்திற்காக ‘மாமா டவுசர் அவுந்துச்சு’ பாடலையும் ஆண்ட்ரியா தான் பாடி இருந்தார். இப்படி அவர் பாடிய ஹிட் பாடல்கள் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது.
இதையும் படியுங்கள்... மலைகள் ஓவர்.. அடுத்து பீச் தான்.. பிகினி உடன் கிளாமர் போஸ்.. ஆண்ட்ரியாவின் போட்டோஸ் வைரல்..