- Home
- Gallery
- மலைகள் ஓவர்.. அடுத்து பீச் தான்.. பிகினி உடன் கிளாமர் போஸ்.. ஆண்ட்ரியாவின் போட்டோஸ் வைரல்..
மலைகள் ஓவர்.. அடுத்து பீச் தான்.. பிகினி உடன் கிளாமர் போஸ்.. ஆண்ட்ரியாவின் போட்டோஸ் வைரல்..
நடிகை அண்ட்ரியாவின் த்ரோபேக் பிகினி போட்டோஸ் இணையத்தில் படு வைரலாகி வருகிறது.

அந்நியன் படத்தில் இடம்பெற்ற கண்ணும் கண்ணும் நோக்கியா பாடல் மூலம் பின்னணி பாடகியாக அறிமுகமானவர் ஆண்ட்ரியா. பின்னர் கௌதம் மேனன் இயக்கிய பச்சைக்கிளி முத்துச்சரம் மூலம் நடிகையாக அறிமுகமானார்.
தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவன், விஸ்வரூபம் 1, 2, துப்பறிவாளன், அரண்மனை, தரமணி, வட சென்னை உள்ளிட்ட படங்களில் நடித்தார். பின்னர் கேமியோ ரோல், செகண்ட் ஹீரோயின் என தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்ட் வந்தார்.
சுந்தர் சியின் அரண்மனை படத்திற்கு பின் சொல்லிக்கொள்ளும் படி எந்த படத்திலும் அவர் நடிக்க வில்லை. பல சர்ச்சைகளில் சிக்கியதாலேயே ஆண்ட்ரியாவின் கெரியர் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
படங்களில் நடிப்பது மட்டுமின்றி பாடல்களை பாடுவதன் மூலம் ஆண்ட்ரியா கோடிகளில் சம்பாதித்து வருகிறார். வெளிநாடுகளில் இசை கச்சேரிகளையும் அவ்வப்போது ஆண்ட்ரியா நடத்தி வருகிறார். அவரின் இசை கச்சேரிகளுக்கு கூட்டம் அலை மோதும்.
தொடர்ந்து படங்களில் பிசியாக நடித்து வருகிறார். பிசாசு 2, நோ எண்ட்ரி உள்ளிட்ட படங்களை அவர் கைவசம் வைத்திருக்கிறார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஆண்ட்ரியா அவ்வப்போது தனது புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.
அந்த வகையில் சிக்கிம் மாநிலம் கேங்டாக்கிற்கு சுற்றுலா சென்ற போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை ஆண்ட்ரியா தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும் மலைகளில் இருந்து திரும்பிட்டதாகவும், பீச்சுக்கு ரெடியாகி வருவதாகவும் குறிப்பிட்டு பிகினி உடன் இருக்கும் த்ரோபேக் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார் ஆண்ட்ரியா. அவரின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.