"ரொம்ப டாமினேட் பன்றாங்க" பிரபல பெண் ஆங்கரால் CWCல் இருந்து விலகிய மணிமேகலை - ஷாக்கிங் இன்ஸ்டா பதிவு!

First Published | Sep 14, 2024, 10:15 PM IST

Anchor Manimegalai : பிரபல தொகுப்பாளினி மணிமேகலை, தான் பயணித்து வந்த "குக் வித் கோமாளி" நிகழ்ச்சியில் இருந்து மன வருத்தத்துடன் விளக்குவதாக இப்போது அறிவித்துள்ளார்.

Anchor Manimegalai

திருப்பூரில் பிறந்து தனது 17வது வயது முதல் தொகுப்பாளினியாக பயணித்து வருபவர் தான் 32 வயது நிரம்பிய மணிமேகலை. பி.எஸ்சி படிப்பில் தேர்ச்சி பெற்ற மணிமேகலை, தொடர்ச்சியாக எம்.பி.ஏ பட்டம் பெற்றார். ஆனால் அவர் தனது மாஸ்டர் டிகிரியை முடிப்பதற்கு முன்னதாகவே, கடந்த 2010ம் ஆண்டு முதல் பிரபல சன் மியூசிக் நிறுவனத்தில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்ற தொடங்கினார். அவருடைய துருதுருப்பான பேச்சு, மக்கள் மத்தியில் அவருக்கு மிகப்பெரிய வரவேற்பை கொடுத்தது. 

கோலிவுட்டில் கடந்த 2018ம் ஆண்டு வெளியான ஜெயம் ரவியின் "டிக் டிக் டிக்" படத்தின் ஆடியோ லாஞ்சை தொகுத்து வழங்கியது இவர் தான். அதன் பிறகு இந்த ஆறு ஆண்டுகளில் எண்ணற்ற திரைப்பட விழாக்களில் தொகுப்பாளியாக அவர் பணியாற்றி வருகிறார். கடந்த 2017ம் ஆண்டு தனது காதலர் உசேன் என்பவரை திருமணம் செய்து கொண்டு அவரோடு மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் மணிமேகலை, சின்னத்திரை வரலாற்றை பொறுத்தவரை அதிக சம்பளம் வாங்கும் டாப் ஆங்கர்களின் வரிசையில் இருந்து வருகிறார். 

கோட்.. வைரலான "மட்ட" பாடல்.. த்ரிஷாவிற்கு முன் வேறு ஒரு நடிகையை அணுகிய VP - அப்புறம் என்ன ஆச்சு?

cook with comali

சன் மியூசிக், சன் தொலைக்காட்சி, சன் நியூஸ் என்று பிரபலமான சேனல்களில் பணியாற்றி வந்த அவர், கடந்த 2019ம் ஆண்டு முதல் ஸ்டார் விஜய் தொலைக்காட்சியோடு பயணித்து வருகிறார். இந்த சூழலில் "குக் வித் கோமாளி" நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசனை தொகுத்து வழங்கி வந்த அவர், தற்பொழுது மிகுந்த மன வேதனையுடன் அந்த நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார்.

Latest Videos


Manimegalai instagram post

இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில் "இனி நான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்க மாட்டேன், எந்த ஒரு நிகழ்ச்சியை எடுத்தாலும் அதில் என்னுடைய நூறு சதவிகித உழைப்பை கொடுக்கும் திறன் என்னிடம் உள்ளது. கடந்த 2019ம் ஆண்டு முதல் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நான் பயணித்து வருகிறேன். இருப்பினும் எதை விடவும் எனக்கு மிகப்பெரியது "சுயமரியாதை". அதை இழந்து எந்த ஒரு இடத்திலும் இருக்க நான் விரும்பவில்லை". 

"நான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகுவதற்கு அதுவே முதல் காரணம். நிகழ்ச்சியின் இந்த சீசனில், குறிப்பிட்ட பிரபலமான ஒரு பெண் தொகுப்பாளினி, அதுவும் குக்காக இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர் என்னுடைய பணியில் அடிக்கடி குறுக்கிட்டு என்னுடைய வேலையை நான் சரியாக செய்யாத வண்ணம் பார்த்துக் கொண்டார். அவருடைய ஆதிக்கமே எனக்கு மிகப்பெரிய மன உளைச்சலை ஏற்படுத்தியது". 

Anchor Manimegalai Insta Post

"கடந்த 2010ம் ஆண்டு முதல் இந்த துறையில் நான் பயணித்து வருகிறேன், இந்த 15 ஆண்டுகளில் எத்தனையோ ஏற்ற இறக்கங்களை நான் சந்தித்து இருக்கிறேன். ஆனால் அந்த பெண் தொகுப்பாளினி நடந்து கொண்டது போல ஒரு முதிர்ச்சியற்ற நடத்தையை நான் எப்போதும் யாரிடமும் கண்டதில்லை. ஆகையால் நான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகுகிறேன். வாழுங்கள் மற்றவர்களையும் வாழ விடுங்கள் கடுமையாக உழையுங்கள்.. கடவுளை நம்புங்கள்" என்று கூறி தனது பதிவினை முடித்து இருக்கிறார் மணிமேகலை.

லதா மங்கேஸ்கரே பாடுவது கஷ்டம்னு சொன்ன பாட்டு.. தமிழ் பாடகியை வைத்து மாஸ் காட்டிய MSV - எந்த பாடல் தெரியுமா?

click me!