யுவன் சங்கர் ராஜா இசையில் இந்த திரைப்படத்தில் வெளியான அனைத்து பாடல்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், மறைந்த அவரது அக்காவும், தேசிய விருது வென்ற பாடகியுமான பவதாரணியின் குரலை AI தொழில்நுட்பம் மூலம் இந்த படத்தில் பயன்படுத்துதி இருந்தார் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா. அதுமட்டுமில்லாமல் மறைந்த முன்னாள் அரசியல் தலைவரும், மூத்த நடிகருமான கேப்டன் விஜயகாந்தின் உருவமும் AI தொழில்நுட்பம் மூலம் இந்த திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்டிருந்தது.
மேலும் கோட் படத்தில் மூத்த தமிழ் திரையுலக நடிகர்கள் பிரசாந்த், பிரபுதேவா நடிகைகள் லைலா, சினேகா உள்ளிட்டவர்களும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த நிலையில், மூத்த தமிழ் திரையுலக நடிகர் மோகன், இப்படத்தில் வில்லனாக நடித்து அசத்தியிருந்தார். தளபதிக்கு ஒரு சிறப்பான பிரியா விடை கொடுக்க நினைத்த வெங்கட் பிரபு, தல தோனி மற்றும் சிவகார்த்திகேயன் போன்ற பெரிய பிரபலங்களையும் கேமியோ கதாபாத்திரத்தில் தனது திரைப்படத்தில் பயன்படுத்தினார்.