
சிரஞ்சீவி தெலுங்கு சினிமாவில் நிலையான இடத்தை பிடிக்காத போதே, அல்லு ராமலிங்கையா சிரஞ்சீவியை தனது மருமகனாக ஏற்றுக்கொண்டார். அதாவது சிரஞ்சீவி அவரின் மனைவி சுரேகாவை திருமணம் செய்து கொள்ளும் போது, சிரஞ்சீவிக்கு பெரிய புகழ் எல்லாம் இல்லை. 1980-ல் தன்னுடைய மனைவியை கரம்பிடித்த போது நேரத்தில்... இவர் நடிப்பில், 1978 ஆம் ஆண்டு வெளியான பிராணம் கரீது மற்றும் புனாதிரல்லு போன்ற சில படங்கள் மட்டுமே ரிலீஸ் ஆகி இருந்தது.
ஒரு சில படங்களிலேயே சிரஞ்சீவி திறமையான நடிகர் என்பதை புரிந்து கொண்ட, மூத்த நடிகர் அல்லு ரமலிங்கையா, அவரை தனது மருமகனாக ஆக்கிக்கொள்ள விரும்பினார். எப்படியும் ஒரு நாள் சிரஞ்சீவி பெரிய நடிகராக வருவார் என்ற நம்பிக்கை அல்லு ரமலிங்கையாவுக்கு ஆணித்தனமாக இருந்ததால், சிரஞ்சீவியை அழைத்து சுரேகாவை மணக்க சம்மதமா என்று கேட்டுள்ளார்.
ஹைக்கூ கவிதை வரிகளால்... வித்யாசாகர் இசையில் உருவான முதல் சூப்பர் ஹிட் பாடல்! எது தெரியுமா?
அப்போதே அல்லு ராமலிங்கையா ஒரு முன்னணி நகைச்சுவை நடிகர், மற்றும் குணச்சித்திர நடிகர். பணம், பதவி, அந்தஸ்து என அல்லு ராமலிங்கையா உயர்ந்த இடத்தில் இருந்தார். ஆனால் ஒரு சாதாரண, வளர்ந்து வரும் ஹீரோவுக்கு தனது மகளை கொடுக்க நினைப்பது, சிரஞ்சீவிக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்திய போதிலும், சுரேகாவை திருமணம் செய்து கொள்ள சம்மதம் கூறினார்.
அதே நேரம் அல்லு ராமலிங்கையாவுக்கு ஒரு சந்தேகம். நான் செய்வது சரியா? என்பதில். மறுபுறம் சுரேகாவுக்கு பெரிய பெரிய இடங்களில் இருந்து அவரை பெண் கேட்டு திருமண அழைப்புகள் வந்துகொண்டிருந்தன. குறிப்பாக சுரேகாவை திருமணம் செய்து கொள்ள கலெக்டர் ஒருவரிடமிருந்து அழைப்பு வந்ததாம். எனவே நடிகர் சிரஞ்சீவிக்கு கொடுக்கலாமா... நிலையான மற்றும் உயர் பதவியில் இருக்கும் கலெக்டருக்கு கொடுக்கலாமா? என்ற மன குழப்பத்துக்கு ஆளானார் அல்லு ராமலிங்கையா.
அப்போது அல்லு ராமலிங்கையா, தனது நெருங்கிய நண்பரும், நல்ல ஆலோசகருமான நடிகர் பிரபாக்கர் ரெட்டியை சந்தித்தாராம். சுரேகாவின் திருமணம் குறித்து அவரது ஆலோசனையை கேட்டாராம். "ரெட்டி சார்... சுரேகாவுக்கு இரண்டு இடங்களில் இருந்து திருமண அழைப்புகள் வந்திருக்கு. சிரஞ்சீவி.. சுரேகாவை மணக்க சம்மதம் தெரிவித்துள்ளார். மறுபுறம் கலெக்டர் ஒருத்தரிடமிருந்தும் திருமண அழைப்பு வந்திருக்கு. இதில் யாருக்கு சுரேகாவை திருமணம் செய்து கொடுத்தால் நல்லது, என்று கேட்டாராம்.
8 நாளில் 'ஜெயிலரை' அலறவிட்ட... தளபதின் 'கோட்' பட வசூல்! எத்தனை கோடி தெரியுமா?
அல்லு ராமலிங்கையாவின் கேள்விக்கு பிரபாக்கர் ரெட்டி நேரடியாக பதில் அளித்தாராம். திருமண விஷயத்தில் பெண்ணின் விருப்பம் என்பது மிகவும் முக்கியம். பெண்ணுக்கு விருப்பமில்லாமல் எவ்வளவு பெரிய இடத்தில் திருமணம் செய்து கொடுத்தாலும் அவள் சந்தோஷமாக இருக்க மாட்டாள். அதனால் சுரேகாவையே கேளுங்க, பெண்ணின் விருப்பப்படி திருமணம் செய்யுங்கன்னு சொன்னாராம்.
பிரபாக்கர் ரெட்டி கூறியது போலவே தனது சுரேகாவின் விருப்பத்தை கேட்டுள்ளார் அல்லு ராமலிங்கையா... அவர் சிரஞ்சீவியை திருமணம் செய்துகொள்ள சம்மதித்தாராம். மகள் சம்மதித்தவுடன் அல்லு ரமலிங்கையா சிரஞ்சீவியுடனான திருமணத்தை உறுதி செய்தார். அதன் படை சிரஞ்சீவி - சுரேகா திருமணம் 1980 பிப்ரவரி 20 ஆம் தேதி திரைப்பட பிரபலங்கள் முன்னிலையில் விமர்சியாக நடந்தது.
ஒருவேளை சுரேகா கலெக்டரை திருமணம் செய்திருந்தால் அது சிரஞ்சீவியின் வாழ்க்கையையே மாற்றி போட்டிருக்க கூடும். சிரஞ்சீவி ஒரு பெரிய நட்சத்திரமாக உயர்ந்த பிறகு கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் வேறு ஒரு நிலைக்கு சென்றது. மாமனாருக்காக அந்த நிறுவனத்தில் சிரஞ்சீவி பல படங்களில் நடித்தார். சிரஞ்சீவி-கீதா ஆர்ட்ஸ் கூட்டணியில் வெளியான பல படங்கள் பெரிய வெற்றியை பெற்றன.
அதேபோல் அல்லு ராமலிங்கையாவின் மருமகனான பிறகு சிரஞ்சீவிக்கு திரைத்துறையில் உயர்வதற்கு வழி எளிதானது. அல்லு ராமலிங்கையா காரணமாக சிரஞ்சீவிக்கு நிறைய வாய்ப்புகள் வந்தன. அந்த வாய்ப்புகளை தனது திறமையால் வெற்றிகளாக மாற்றி சிரஞ்சீவி மெகா ஸ்டாராக உயர்ந்தார். சிரஞ்சீவி-சுரேகா திருமணத்திற்கு முன் நடந்த இந்த சம்பவம் குறித்து, நடிகர் பிரபாக்கர் ரெட்டியின் மனைவி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.