தமிழ் சினிமாவிற்கு முதல் முறையாக அறிமுகமாகும் கே.வி.என் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் முதல் திரைப்படத்தில் தளபதி விஜய் நடிக்க உள்ளார். ஜனநாயகத்தை காக்க தீப்பந்தம் ஏந்தி தளபதி விஜய் வருவது போல இந்த திரைப்படத்தின் போஸ்டர் வெளியாகி உள்ளது. பிரபல இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில், அனிருத் திசையில் உருவாகவுள்ள இந்த திரைப்படம் எதிர்வரும் 2025ம் ஆண்டு அக்டோபர் மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
விரைவில் இந்த திரைப்படத்தில் நடிக்க உள்ள நடிகர்கள், நடிகைகள் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் சரியாக இந்த திரைப்படம் வெளியாக ஓராண்டு காலம் இருக்கிறது என்பதால், தளபதி விஜய் வைத்து மிக நேர்த்தியாக இந்த திரைப்படத்தை உருவாக்க எச் வினோத் முனைந்திருக்கிறார் என்பது இதன் மூலம் தெரிகிறது.