செல்ஃபோன்
இசைக்குயில் நம்மை அழைத்திடும் போது,
தொலைவிலும் வாழ்ந்தாலும் தொடுவோம் நாமே.
சிகரெட்
விரல்களின் இடையே ஒரு விரல் போல,
சில நொடி வாழ்கின்ற ஆறாம் விரல்.
வெட்கம்
இது பெண்மை பேசிடும் முதல் ஆசை வார்த்தைதான்.
மீசை
இது எனக்கு மட்டும் சொந்தமாகும் கூந்தல் குழந்தைதான்.
ஆலாபனை நான் பாடிட அரங்கேரிடும் காதல் இசை கண்ணா!
திருக்குறள்:
இருவரிக் கவிதை ஒரு பொருள் தருமே,
இருவரும் இது போல இருந்தால் சுகம்.
நிலா:
இரவினில் குளிக்கும் தேவதை இவளோ,
வளர்ந்தே தேய்கின்ற வெள்ளை நிழல்.
கண்ணாடி
இதில் என்னைப் பார்க்கிறேன், அது உன்னைக் காட்டுதே!
காதல்
நம் நான்-கு கண்ணில் தோன்றுகின்ற ஒற்றைக் கனவடா!
என இந்த பாடலை அழகு படுத்தி இருப்பார்கள் கபிலன் மற்றும் வித்யா சாகர். மேலும் இந்த பாடலின் வெற்றிக்கு மிகப்பெரிய பலமாக பார்க்கப்பட்டது, ஹரிணியின் குரல். இதற்கு முன் எந்த ஒரு பாடலும், இப்படி ஒரு ஹைக்கூ ஸ்டைலில் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இரவு பார்ட்டியால் கிடைத்த பட வாய்ப்பு; திருமணமான நடிகரின் தொடர்பால் கேரியரை இழந்து காணாமல் போன தமிழ் நடிகை!