37-ஆண்டுகள் தேசத்தின் பாதுகாப்பை உறுதி செய்தவர்! தந்தையின் மரணம் குறித்து கருணாகரன் உருக்கம்!

First Published | Sep 14, 2024, 1:10 PM IST

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராகவும், குணச்சித்திர நடிகராகவும் அறியப்படும் கருணாகரன் தன்னுடைய தந்தை இறந்த சோகமான தகவலை சமூக வலைதளத்தில் ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.
 

Karunakaran Lineups

2010-ஆம் ஆண்டு, நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் இயக்குனர் நலன் குமாரசுவாமி இயக்கிய 'நடந்தது என்ன' என்கிற குறும்படத்தில் நடித்து அனைவரது பாராட்டுகளை பெற்ற கருணாகரன்... அடுத்தடுத்து சுமார் 5-க்கும் மேற்பட்ட குறும்படங்களில் நடித்தார். மேலும் 2012-ஆம் ஆண்டு இவரை சுந்தர் சி தான் இயக்கிய, காமெடி ஜார்னர் திரைப்படமான 'கலகலப்பு' திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில், காமெடியனாக நடிக்க வைத்தார். இதைத்தொடர்ந்து பீட்சா, மாலைப்பொழுது மயக்கத்திலே, சூது கவ்வும், தீயா வேலை செய்யணும் குமாரு, யாமிருக்க பயமேன், ஜிகர்தண்டா, யான், லிங்கா, கப்பல், என அடுத்தடுத்து பல படங்களில் நடித்தார்.
 

Karunakaran

ஏராளமான படங்களில் காமெடியனாக மட்டுமின்றி, குணச்சித்திர வேடத்திலும் நடித்தார். அதேபோல் இயக்குனர் ராதா மோகன் இயக்கத்தில்ம், கருணாகரன் ஹீரோவாக நடித்த திரைப்படம் 'உப்பு கருவாடு'. இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக ரக்ஷிதா மகாலட்சுமி நடித்திருந்தார். அதேபோல் நடிகை நந்திதா, சதீஷ் கிருஷ்ணன், உள்ளிட்ட பலர் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர்.

இரவு பார்ட்டியால் கிடைத்த பட வாய்ப்பு; திருமணமான நடிகரின் தொடர்பால் கேரியரை இழந்து காணாமல் போன தமிழ் நடிகை!
 

Latest Videos


திரைப்படங்கள் மட்டுமின்றி 2019 ஆம் ஆண்டு அசால்டா அலறவிடும் புல்லிங்கோ (ஃபெயில் ஆர்மி வித் கருணாகரன்) என்கிற நிகழ்ச்சியைடிஸ்கவரி தொலைக்காட்சிக்காக தொகுத்து வழங்கினார். 2022 ஆம் ஆண்டு லிட்டில் சூப்பர் ஹீரோஸ், என்கிற நிகழ்ச்சியையும் கலைஞர் டிவிக்காக தொகுத்து வழங்கினார். குறும்படத்தில் ஆரம்பித்த இவரது பயணம், தற்போது சினிமா, வெப் சீரிஸ், என கலகலப்பாக சென்று கொண்டிருக்கிறது. இவருடைய முயற்சிகள் அனைத்துக்கும் உறுதுணையாக நின்று சப்போர்ட் செய்தவர் இவருடைய தந்தை காளிதாஸ் தான். இவர் கேபினன்ட் செயலக அதிகாரியாக சுமார் 37 வருடங்கள் பணியாற்றியவர்.

77 வயதாகும் ஓய்வு பெற்ற கேபினட் செயலக அதிகாரியும், நடிகர் கருணாகரனின் தந்தையுமான காளிதாஸ் உடல்நல குறைவு காரணமாக உயிரிழந்த தகவலை கருணாகரன் தன்னுடைய சமூக வலைதளத்தில் மிகவும் உருக்கமாக “தேசத்தின் பாதுகாப்பை உறுதி செய்து 37 ஆண்டுகள் சேவையாற்றிய என் தந்தை இன்று உயிரிழந்தார்" என தெரிவித்துள்ளார். மேலும் இன்று மாலை 3 மணி அளவில் அவரது இறுதிச் சடங்குகள் பெசன்ட் நகரில் நடைபெற உள்ளதாக கூறியுள்ளார். மேலும் இந்த இக்கட்டான சூழ்நிலையில் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, செய்தியாளர்கள் குழுவை அனுப்புவதை தவிர்க்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து நடிகர் கருணாகரனின் தந்தை மறைவுக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலர் தங்களுடைய இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

நடிகைகள் பற்றி அவதூறு பேச்சு! யூடியூபர் மீது நடிகர் சங்கம் சார்பில் முதல் புகார் கொடுத்த நடிகை ரோகினி!

click me!