இரவு பார்ட்டியால் கிடைத்த பட வாய்ப்பு; திருமணமான நடிகரின் தொடர்பால் கேரியரை இழந்து காணாமல் போன தமிழ் நடிகை!

Published : Sep 14, 2024, 11:15 AM IST

தமிழ், மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து பிரபலமான நடிகை ஒருவர்... அழகும், திறமையும் இருந்தும்... பிரபல டாப் நடிகருடன் வைத்திருந்த தொடர்பால் தன்னுடைய மொத்த கேரியரையுமே இழந்தார். அவர் யார் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.  

PREV
16
இரவு பார்ட்டியால் கிடைத்த பட வாய்ப்பு; திருமணமான நடிகரின் தொடர்பால் கேரியரை இழந்து காணாமல் போன தமிழ் நடிகை!
Nikita Thukral Lost Cinema Carrier:

அழகும் - திறமையும் இருக்கும் சில பிரபலங்கள் ஏனோ... தங்களின் வாழ்க்கையில் திசை மாறி சென்றுவிடுவதால், தானாக கிடைத்த வாய்ப்பை கூட தவறவிட நேர்கிறது. அப்படி பெரிய நடிகையாக வருவார் என நினைத்த ஹீரோயின் ஒருவர்... இப்போது தடம் தெரியாமல் தென்னிந்திய திரையுலகை விட்டே ஒதுங்குவிட்டார். இவர் ஒட்டுமொத்தமாக திரையுலகிற்கு முழுக்கு போட காரணம் திருமணமான டாப் நடிகருடன் வைத்திருந்த தகாத உறவும், இதனால் வந்த பிரச்சனைகளும் தான். 
 

26
Ramanaidu Introduce his Production:

பழம்பெரும் தயாரிப்பாளரான ராமாநாயுடுவால் தெலுங்கு தெலுங்கில் கடந்த 2002-ஆம் ஆண்டு வெளியான 'ஹாய்' திரைப்படத்தின் மூலம் அறிமுகம் செய்யப்பட்டார். இவருக்கு இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது கூட சுவாரஸ்யமான கதை தான்.  "நிகிதா ஒரு பஞ்சாபி குடும்பத்தைச் சேர்ந்த பெண் என்றாலும், இவர் பெற்றோருடன் வசித்து வந்தது மும்பையில் தான். அங்கு தான் முதுகலை பட்ட படிப்பை முடித்தார்.

நடிகைகள் பற்றி அவதூறு பேச்சு! யூடியூபர் மீது நடிகர் சங்கம் சார்பில் முதல் புகார் கொடுத்த நடிகை ரோகினி!

இந்நிலையில் ஜூஹூவில் உள்ள ஒரு ஹோட்டலில், இரவு பார்ட்டியில் தோழிகளுடன் கலந்து கொண்டபோது... ​​பிரபல தயாரிப்பாளர் ராமாநாயுடுவின் கண்ணில் பட்டர். நிகிதாவின் அழகைப் பார்த்து இவர் கண்டிப்பாக பெரிய ஹீரோயினாக வரவேண்டிய பெண் என முடிவு செய்து அவரை அணுகி பேசியுள்ளார். பின்னர் தான் தயாரித்த படத்தில் நடிக்கவும் வாய்ப்பு கொடுத்தார். 

36
Nikita Thukral South Indian Movies:

அந்த படத்திற்கு பிறகு அவர் நடித்த படங்கள் ஹிட் ஆனதால், அவருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் வந்தன. ஸ்டார் ஹீரோயின் அந்தஸ்துக்கு உயர்ந்தார். மேலும்  தமிழ் மற்றும் கன்னட மொழிகளில் முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.  மலையாளத்தில் நடிகர்  ஃபஹத் பாசில் ஹீரோவாக அறிமுகமான, படத்தில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பபை பெற்றார். ஆனால் எதிர்பாராத விதமாக இந்த படம் படு தோல்வியை சந்தித்தது.
 

46
Nikita Thukral And Dharshan Affair:

தமிழில், 2003-ஆம் ஆண்டு வெளியான குறும்பு படத்தில் இரண்டு நாயகிகளில் ஒருவராக அறிமுகமான நிகிதா, பின்னர் சரத்குமார் ஜோடியாக சத்ரபதி, சிபி ராஜ் ஜோடியாக வெற்றி வேல் சக்திவேல், முரண், உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான சரோஜா படத்தில், இவர் ஆடிய ஐட்டம் பாடல் மிகவும் பிரபலமானது.

ஏஜ் இஸ் ஜஸ்ட் நம்பர்! நஸ்ரியா முதல் சாயிஷா வரை.. அதிக வயசு வித்தியாசத்தில் திருமணம் செய்த 14 பிரபலங்கள்!
 

56
Nikita Thukral Movies

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழிகளிலும் பிஸியான நடிகையாக வளம் வந்து கொண்டிருந்த இவரின் கேரியர் ஒட்டுமொத்தமாக குளோஸ் ஆக காரணம், கன்னட திரையுலகின் ஸ்டார் ஹீரோவான தர்ஷன் தான். ஏற்கனவே தர்ஷனுக்கு திருமணம் ஆகி, பிள்ளைகள் இருப்பது தெரிந்தும், தர்ஷனுடன் தவறான உறவில் இருந்தார் நிகிதா. இவர்களது தவறான உறவு குறித்து தர்ஷனின் மனைவி விஜயலட்சுமி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதில் நிகிதாவுடன் தொடர்பு வைத்திருப்பது குறித்து கேட்டதற்கு தன்னை துப்பாக்கியை காட்டி மிரட்டியதாக கூறி இருந்தார்.

66
Nikita Thukral Married business man

நிகிதா இப்படி ஒரு சர்ச்சையில் சிக்கியதால், கன்னட திரையுலகில் நடிக்க அவருக்கு மூன்றாண்டு தடை விதிக்கப்பட்டது. இவர் மீதான சர்ச்சையின் காரணமாக ஹீரோயின் இமேஜ் பறிக்கப்பட்டு... பல படங்களில் ஒப்புக்கு சப்பாணி கதாபாத்திரங்களே கிடைத்ததால், இனி சினிமா செட் ஆகாது என முடிவு செய்து ஒட்டுமொத்தமாக திரையுலகை விட்டு தொழிலதிபர் ககன்தீப் சிங் என்பவரை திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் டிவி ஹிட் சீரியலில் இருந்து திடீர் என விலகிய நடிகை! இனி அவருக்கு பதில் இவர் தான்!

click me!

Recommended Stories