
HD. குமார சுவாமி மற்றும் ராதிகா:
கர்நாடக முன்னாள் முதல்வரான எச்.டி.குமார சுவாமிக்கும் தற்போது 64 வயதாகும் நிலையில், இவர் நடிகை குட்டி ராதிகாவை 2006-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். குட்டி ராதிகாவுக்கு தற்போது 37 வயது மட்டுமே ஆகிறது. இவர்கள் இருவருக்கும் சுமார் 27 வயது வித்தியாசம். அதே போல் எச்.டி.குமாரசாமி மற்றும் குட்டி ராதிகா தம்பதிக்கு ஷமிகா என்கிற மகள் ஒருவரும் உள்ளார்.
நரேஷ் விஜய கிருஷ்ணா மற்றும் பவித்ரா லோகேஷ்:
பிரபல தெலுங்கு நடிகர் நரேஷ் விஜய கிருஷ்ணாவுக்கு (60) வயது ஆகும் நிலையில், இதுவரை 4 முறை திருமணம் செய்துள்ளார். இவர் முதலில் மூத்த நடன இயக்குனர் ஸ்ரீனுவின் மகளை மணந்தார், இந்த தம்பதியருக்கு நவீன் விஜய் கிருஷ்ணா என்ற மகன் பிறந்தார், பின்னர் அவர் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்த பிறகு ரேகா சுப்ரியாவை மணந்தார். அவர் தனது இரண்டாவது மனைவியுடன் ஒரு மகனைப் பெற்ற பிறகு விவாகரத்து செய்தார். இவரை தொடர்ந்து, கிட்டத்தட்ட 20 வயது இளையவரான ரம்யா ரகுபதியை தனது 50 வயதில் திருமணம் செய்து கொண்டார். இவரிடம் இருந்து பிடிவாதமாக விவாகரத்து பெற்ற நரேஷ், 2023 இல், நான்காவது திருமணமாக நடிகை பவித்ரா லோகேஷை மணந்தார். பவித்ரா லோகேஷுக்கும் - நரேனுக்கு சுமார் 16 வயது வித்தியாசமாகும்.
முகேஷ் மற்றும் மெத்தில் தேவிகா
தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்து பிரபலமான நடிகர் முகேஷுக்கு தற்போது 66 வயது ஆகிறது. இவர் தன்னுடைய முதல் மனைவி சரிதாவை விவாகரத்து செய்த பின்னர், டான்சர் மெத்தில் தேவிகா (46), என்பவரை திருமணம் செய்தார் பின்னர் 2013-ஆம் ஆண்டு திருமணம் செய்து 2021-ல் அவரிடம் இருந்தும் விவாகரத்து பெற்றார். இவர்கள் இருவருக்கும் சுமார் 19 வயது வித்தியாசம்.
தில் ராஜு மற்றும் வைகா ரெட்டி:
தளபதி விஜய்யின் வாரிசு படம் உட்பட, தெலுங்கில் சுமார் 50க்கும் மேற்பட்ட திரைப்படங்களைத் தயாரித்துள்ள தயாரிப்பாளர் தில் ராஜு (52), தனது மனைவி அனிதா ரெட்டி இறந்த பின்னர் திருமணம் வேண்டாம் என இருந்தாலும், தில் ராஜுவின் மகள் தன்னுடைய தந்தைக்கு ஒரு துணை வேண்டும் என வைகா ரெட்டி (33) என்பவரை திருமணம் செய்து வைத்தார். இவர்களுக்கு தற்போது 2 வயதில் ஆண் குழந்தை ஒன்றும் உள்ளது. மேலும் இவர்கள் இருவருக்கும் சுமார் 19 வயது வித்தியாசம்.
ஆர்யா மற்றும் சாயிஷா சைகல்:
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் ஆர்யா (42), கஜினிகாந்த் படத்தில் நடிக்கும் போது நடிகை சாயிஷாவை (25) காதலித்த நிலையில், பெற்றோர் சம்மதத்துக்கு கடந்த 2019-ல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 3 வயதில் மகள் ஒருவரும் உள்ளார். இந்த நட்சத்திர ஜோடிகளுக்கு சுமார் 17 வயது வித்தியாசம்.
திலீப் மற்றும் காவ்யா மாதவன்:
பிரபல மலையான நடிகர் திலீப் (55), தன்னுடைய முதல் மனைவியான... மலையாள லேடி சூப்பர் ஸ்டார், மஞ்சு வாரியாரை விவாகரத்து செய்த பின்னர், தன்னுடன் பல படங்களில் நடித்த நடிகை காவ்யா மாதவனை (38) திருமணம் செய்து கொண்டார். காவ்யா மாதவனும் ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்தானவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் திலீப் - காவ்யா மாதவன் திருமணம் கடந்த 2016 -ல் நடந்து முடிந்ததது. இவர்களுக்கு 5 வயதில் அழகிய மகள் ஒருவரும் உள்ளார். இந்த நட்சத்திர ஜோடிக்கு சுமார் 17 வயது வித்தியாசம்.
தர்மேந்திரா மற்றும் ஹேமா மாலினி:
பாலிவுட் நடிகர் தர்மேந்திரா (87) 1970 இல் பாலிவுட் படமான 'தும் ஹசீன் மைன் ஜவான்' படத்தில் இணைந்து பணியாற்றிய பிறகு ஹேமா மாலினியை (74) மணந்தார். அவர்கள் இருவரும், 1980 இல் திருமணம் செய்து கொண்டனர். தர்மேந்திராவுக்கு ஏற்கனவே பிரகாஷ் கவுர் என்பவருடன் திருமணம் ஆகி இரண்டு மகன்கள் இருந்தனர். மேலும் தர்மேந்திரா - ஹேமா மாலினிக்கு சுமார் 13 வயது வித்தியாசம் இருந்தது.
பிரகாஷ் ராஜ் - போனி வர்மா:
தென்னிந்திய திரையுலகில் முன்னணி குணசித்ர நடிகராக இருக்கும் பிரகாஷ் ராஜ் (58), 1994 இல் லலிதா குமாரியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 2009 இல் அவரை விவாகரத்து செய்த பின்னர், பிரபல பாடகி போனி வர்மா (45), என்பவரை... 2010 இல் திருமணம் செய்தார். இவர்களுக்கு அழகிய ஆண் குழந்தை ஒன்றும் உள்ளது. இவர்களுக்கு இடையே 13 வயது வித்தியாசம் உள்ளது.
ஃபஹத் பாசில் - நஸ்ரியா நஜிம்:
மலையாள முன்னணி நடிகரான ஃபஹத் பாசில், சமீப காலமாக தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளிலும் வெயிட்டான ரோல்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். இவருடைய நடிப்புக்கும் அணைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஃபஹத் பாசில் (40) நடிகை நஸ்ரியாவை (28) 2014-ல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இடையே 12 வயது வித்தியாசம் உள்ளது.
பிரியதர்ஷன் - லிசி
மலையாளம் மற்றும் இந்தி திரைப்பட தயாரிப்பாளரான பிரியதர்ஷன் (66), நடிகை லிசி (56) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் மகள் தற்போது தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக உள்ளார். இவர்கள் இருவருக்கும் சுமார் 10 வயது வித்தியாசம் உள்ளது.
ஆஷிஷ் வித்யார்த்தி - ரூபாலி பருவா:
இந்திய சினிமாவின் கிட்டத்தட்ட அனைத்து முக்கிய மொழிகளிலும் நடித்த இந்திய நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி (60), கடந்த 25 மே 2023 அன்று, ரூபாலி பருவா (50) என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆஷிஷுக்கு இது இரண்டாவது திருமணம் ஆகும்.
ரன்பீர் கபூர் - ஆலியா பட்:
30 வயதான பாலிவுட் நடிகை ஆலியா பட், 2022 ஆம் ஆண்டு வெளியான ‘ஆர்ஆர்ஆர்’ படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் அறிமுகமானார், அதே ஆண்டு பிரபல பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூரை (40) திருமணம் செய்து கொண்டார், அவர்களுக்கு இடையே 10 வயது இடைவெளி உள்ளது. மேலும் 1 வயதில் மகள் ஒருவரும் இந்த நட்சத்திர ஜோடிக்கு உள்ளார்.
சைஃப் அலி கான் - கரீனா கபூர்:
பாலிவுட் பிரபலங்களான சைஃப் அலி கான் (52) மற்றும் கரீனா கபூர் (42) ஜோடி... 2012 இல் திருமணம் செய்து கொண்டனர், சைஃப் அலிகானுக்கு இது இரண்டாவது திருமணம் ஆகும். இவர்கள் இருவருக்கும் சுமார் 10 வயது வித்தியாசம் உள்ளது. சமீப காலமாக சைப் அலிகான் தென்னிந்திய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். ஆதிபுருஷ் படத்தில் இவரின் கதாபாத்திரம் விமர்சனங்களுக்கு ஆளான நிலையில், தற்போது Jr
NTR நடித்து வரும், தேவரா படத்திலும் நடித்துள்ளார்.
அம்பரீஷ் - சுமலதா:
தெலுங்கு திரையுலகை சேர்ந்த நடிகை சுமலதா (59) 1991 ஆம் ஆண்டு மறைந்த கன்னட ரெபெல் ஸ்டார் அம்பரீஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சுமார் 12 வயது வித்தியாசம் உள்ளது.