ஒரு படத்திற்கு 170 முதல் 250 கோடி வரை சம்பளமாக பெரும் பிரபல நடிகர் தான் ஷாருக்கான், அவர் மும்பையில் சுமார் 200 கோடி ரூபாய் மதிப்பிலான Mannath என்று அழைக்கப்படும் ஒரு சொகுசு பங்களாவில் தான் வசித்து வருகின்றார். தினமும் அவரை காண, பல்லாயிரம் ரசிகர்கள் அங்கு வந்து செல்வதுண்டு. சரி அந்த Mannat?".̄l̥0 om9inmkl,./வீட்டின் உட்புறம் எப்படி இருக்கும் என்று இப்போது பார்க்கலாம்.
அழகிய வேலைபாடுகளுடன் அமைக்கப்பட்ட, மும்பையில் உள்ள இந்த வீடு, ஷாருக்கான் மற்றும் அவருடைய மனைவி கௌரிக் கானின் சொந்த வீடு. மேலும் இந்த வீட்டிற்கான இன்டிரியர் டிசைனிங் வேலைகள் அனைத்தையும் செய்தது ஷாருக்கானின் மனைவி கௌரி கான் என்பது குறிப்பிடத்தக்கது.
38
SRK Wife Gauri Khan
மும்பையில் உள்ள இந்த 200 கோடி ரூபாய் சொகுசு பங்களாவில் தான் இப்போது ஷாருக்கான் வசித்து வருகிறார். சுமார் 23 ஆண்டுகளுக்கு முன்பு கடந்த 2001ம் ஆண்டு அவர் இந்த வீட்டை வாங்கினார். அப்போது தான் இந்த வீட்டிற்கு மன்னத் என்று பெயரிடப்பட்டது.
48
SRK Awards
இந்த வீட்டின் இன்டீரியர் டிசைனரான கௌரி கான் தனது கணவருக்காகவே பிரத்யேகமாக ஒரு அறையை ஒதுக்கி இருக்கிறார். அதில் தான் ஷாருக்கான் பெறுகின்ற அனைத்து விருதுகளும் வைக்கப்படுமாம்.
58
Gauri Khan Room
மும்பையில் உள்ள ஷாருக்கானின் இந்த மன்னத் வீடு மிகவும் பிரம்மாண்டமானது. குறிப்பாக இந்த வீட்டுக்குள் ஒரு அழகிய ரூம் இருக்கிறது. அதில் சாருக் கானின் மனைவி கௌரி கான் தன்னுடைய காலணிகள் அனைத்தையும் அடுக்கி வைத்திருக்கிறாராம்.
68
Mini Theater
திரைப்படங்களில் நடிப்பது மட்டுமில்லாமல் பல மொழி திரைப்படங்களை பார்ப்பதிலும் மிகவும் ஆர்வம் கொண்டவர் ஷாருக்கான். ஆகையால் இந்த வீட்டிற்குள் ஒரு மினி தியேட்டரும் அமைக்கப்பட்டிருக்கிறது. மிகவும் ஆடம்பரமாக அமைக்கப்பட்ட இந்த மினி தியேட்டர், வெல்வெட் சுவர்களால் அமைக்கப்பட்டுள்ளது. ஷோலே போன்ற படங்களின் போஸ்டர்கள் கூட இந்த தியேட்டரில் ஒட்டப்பட்டிருக்குமாம்.
78
Drawing Room
இத்தாலிய கட்டிடக்கலை மற்றும் உலகம் முழுவதிலுமிருந்து சேகரிக்கப்பட்ட அரிய கலை பொருட்கள் ஆகியவற்றை இணைத்து, ஷாருக்கின் வீட்டின் டிராயிங் அறைக்கு ஒரு அரச தோற்றத்தை அந்த வடிவமைப்பாளர் கொண்டு வந்துள்ளார். இது அந்த வீட்டின் முக்கிய ஈர்ப்பாகும்.
88
Mannath Interior
இந்த ஆறு மாடி வீட்டில் லிப்ட் அமைப்பும் உள்ளது. மேலும், வீட்டின் படிக்கட்டுகள் மரத்தால் செய்யப்பட்டுள்ளன, கூடுதலாக வீட்டின் அலங்காரத்திற்காக, பல்வேறு நாடுகளின் மரம் மற்றும் தனித்துவமான உட்புறம் பயன்படுத்தப்பட்டுள்ளன.