தமிழ் திரையுலகை பொறுத்தவரை கடந்த 45 ஆண்டுகளுக்கு மேலாக டாப் நடிகையாக பயணித்து வருபவர் தான் ராதிகா சரத்குமார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல், கேப்டன் விஜயகாந்த், புரட்சி தமிழன் சத்யராஜ் என்று தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை இவர் ஜோடி போட்டு நடிக்காத டாப் நடிகர்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு மிக நேர்த்தியான நடிகையாக இப்போது வரை திகழ்ந்து வருகிறார். அதுமட்டும் அல்லாமல், தனது மனதில் பட்ட விஷயங்களை ஒளிவு மறைவு இன்றி, எந்தவித தயக்கமும் இன்றி, பொதுவெளியில் மிக போல்டாக பேசக்கூடிய வெகு சில நடிகைகளில் இவரும் ஒருவர்.