ஏற்கனவே தல அஜித்தை வைத்து மங்காத்தா என்ற மெகா ஹிட் படத்தை கொடுத்த இயக்குனர் வெங்கட் பிரபு முதல் முறையாக பிரபல நடிகர் தளபதி விஜயை வைத்து இயக்கிய முதலும், கடைசி திரைப்படமாக மாறியுள்ளது கோட் என்றால் அது மிகையல்ல. GOAT படத்தில் மூத்த தமிழ் திரையுலக நடிகர்கள் மற்றும் நடிகைகள் பிரஷாந்த், பிரபுதேவா, லைலா, சினேகா, ஜெயராம் உள்ளிட்டவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். அதே போல பிரபல நடிகர் மோகன் கோட் படத்தில் வில்லனாக நடித்திருந்தார். இவர்கள் மட்டுமல்லாமல் கோட் படம் மெகா ஹிட்டாக உதவியது இப்படத்தில் வந்த கேமியோ கதாபாத்திரங்களும் தான்.