அதைத்தொடர்ந்து தமிழில் சிம்புவின் "வந்தா ராஜாவா தான் வருவேன்" மற்றும் "பூமராங்" போன்ற படங்களில் நடித்த மேகா ஆகாஷ், உடனடியாக கோலிவுட்டில் இருந்து பாலிவுட் உலகிற்கு இடம்பெயர்ந்தார். ஆனால் அங்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைக்காததால், மீண்டும் தமிழ் மொழிக்கே திரும்பினார். இப்போது தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் தான் அதிக அளவிலான திரைப்படங்களில் அவர் தொடர்ச்சியாக நடித்து வருகிறார்.