தளபதி விஜய் ரசிகர்களின், மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த வாரம் செப்டம்பர் 5-ஆம் தேதி வெளியான திரைப்படம் 'கோட்'. இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்திருந்த இந்த படத்தில், ஏராளமான சிறப்பம்சங்கள் இடம் பெற்றிருந்தது. குறிப்பாக ஏஐ டெக்னாலஜி மூலம் விஜய்யின் இளம் வயது தோற்றத்தை ரசிகர்கள் வெள்ளி திரையில் கண்டு ரசித்தனர். மேலும் விஜயகாந்தின் கதாபாத்திரத்திற்கும் ஏஐ டெக்னாலஜி மூலம் உயிர் கொடுத்திருந்தார் வெங்கட் பிரபு. அதே போல், செந்தூரப்பாண்டி படத்திற்கு பின்னர் விஜயகாந்த் மற்றும் விஜய் மீண்டும் ஒரே படத்தில் பார்க்க முடிந்தது. விஜயகாந்த் தோன்றிய காட்சிகளை பார்த்து, ரசிகர்கள் திரையரங்கில் ஆரவாரம் செய்து கொண்டாடினர்.
25
AI Technology:
மேலும் மறைந்த தன்னுடைய சகோதரி பவதாரணியின் குரலை ஏ ஐ மூலம் மாற்றம் செய்து, யுவன் ஷங்கர் ராஜா வெளியிட்ட பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. தோனியின் ஸ்கிரீன் பிரிசென்ஸ், மற்றும் சிவகார்த்திகேயனின் சிறப்பு தோற்றம் போன்றவை இந்த படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்தது. இதை தவிர இப்படத்தில் நடித்த நடிகர் பிரசாந்த், பிரபுதேவா, மோகன், லைலா, அஜ்மல் அமீர், ஆகிய அனைவருமே தங்களின் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தனர்.
தளபதி விஜய்க்கு ஜோடியாக நடிகை சினேகா நடித்த காட்சிகள் ரசிகர்களின் மனதை அதிகம் கவர்ந்த நிலையில், மீனாட்சி சவுதிரியின் துறுதுறுப்பான நடிப்பும், ஸபார்க் பாடலில் இவர் காட்டிய கவர்ச்சியும் ரசிகர்களை கிளுகிளுப்பாக்கியது. முதல் நாளே இப்படம் சுமார் 126 கோடி வசூல் செய்ததாக படக்குழு அறிவித்த நிலையில், கோட் திரைப்படம் வெளியாகி ஒரு வாரத்தை கடந்துள்ள நிலையில், தற்போது 8 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்கிற தகவல் தெரியவந்துள்ளது.
45
Jailer Movie
அதன்படி 'கோட்' திரைப்படம் இதுவரை உலக அளவில், சுமார் 450 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரூபாய் 400 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம், ரிலீஸ் ஆவதற்கு முன்பே தளபதி விஜய்க்கு உள்ள மார்க்கெட் காரணமாக போட்ட பணத்தை எடுத்து விட்டதாக அர்ச்சனா கல்பாத்தி தெரிவித்திருந்த நிலையில், தற்போது கோட் திரைப்படம் பட்ஜெட்டின் வசூலை தாண்டி வசூலித்துள்ளது. இந்த வசூலை தளபதி ரசிகர்கள் சிலர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் வசூலுடன் ஒப்பிட்டு வருகின்றனர். அதாவது ஜெயிலர் திரைப்படம் எட்டு நாட்களில் 375 கோடி மட்டுமே வசூலித்ததாக கூறி.. தளபதியின் விஜய் கோட் 450 கோடி வசூலித்துள்ளதாக தெரிவித்து வருகின்றனர்.
தளபதி விஜய் தற்போது விக்ரவாண்டியில் தன்னுடைய கட்சியின் சார்பில் நடைபெற உள்ள, கட்சியின் முதல் மாநாட்டில் கலந்து கொள்வதில் ஆர்வம் காட்டி வரும் நிலையில், இதைத்தொடர்ந்து இயக்குனர் எச் வினோத் இயக்கத்தில் 69 வது படத்தில் நடிக்க உள்ளார். கட்சியின் பணிகளை ஒரு வருடத்திற்கு முன்பே தமிழக வெற்றிக் கழகம் முடிவு செய்துள்ளதால், இந்த படத்தை மூன்று மாதத்தில் எடுத்து முடிக்க வேண்டும் என விஜய் இயக்குனர் எச்.வினோத்திடம் கேட்டுக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.