"வித்அவுட் மேக்அப்.. Rugged லுக்கில் மிரட்டப்போறேன்" அடுத்த படம் பற்றி பேசிய "லெஜெண்ட்"!

First Published Sep 14, 2024, 4:43 PM IST

Legend Saravanan : பிரபல நடிகர் மற்றும் தொழிலதிபர் லெஜன்ட் சரவணன், தனது அடுத்த திரைப்படம் குறித்த சில சுவாரசியமான தகவல்களை ஒரு செய்தியாளர் சந்திப்பில் வெளியிட்டிருக்கிறார்.

Arul Saravanan

சென்னை மட்டுமல்ல, தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மிகவும் பிரபலமான பல்பொருள் அங்காடிகளில் ஒன்று சரவணா ஸ்டோர்ஸ். வருடா வருடம் தீபாவளி, பொங்கல் மற்றும் ஆடி போன்ற பண்டிகைகளுக்கு இந்த நிறுவனத்தின் உரிமையாளர் அருள் சரவணன் வெளியிடும் விளம்பரங்கள் மக்கள் மத்தியில் மிக பிரபலம். சேலத்தில் கடந்த 1966ம் ஆண்டு பிறந்த சரவணனுக்கு இப்போது வயது 58. 

இளம் வயதிலேயே மிகப்பெரிய தொழிலதிபராக வலம் வந்த அவர், கடந்த 2022ம் ஆண்டு எடுத்த ஒரு மாபெரும் முடிவு தான் ஹீரோவாக கலை உலகில் களமிறங்கும் முடிவு. பிரபல இயக்குனர்கள் ஜோசெப் ஆரோக்கியம் மற்றும் ஜோசப் டி சாமி இயக்கத்தில், தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரான ஹாரிஸ் ஜெயராஜ் இசையில், "தி லெஜெண்ட்" என்கின்ற திரைப்படத்தில் சரவணன் நடித்திருந்தார். அந்த திரைப்படத்தை தயாரித்ததும் அவரே தான்.

37-ஆண்டுகள் தேசத்தின் பாதுகாப்பை உறுதி செய்தவர்! தந்தையின் மரணம் குறித்து கருணாகரன் உருக்கம்!

Actor Arul Saravanan

கடந்த 2022ம் ஆண்டு வெளியான "தி லெஜெண்ட்" திரைப்படத்தில் நாயகனாக அருள் சரவணனும், நாயகியாக ஊர்வசி என்கின்ற நடிகையும் நடித்திருந்தனர். அது மட்டும் அல்லாமல் முக்கிய வேடங்களில் மூத்த நடிகர்கள் பிரபு, விவேக், சுமன், நாசர், விஜயகுமார், மயில்சாமி, சிங்கம்புலி, லிவிங்ஸ்டண், மன்சூர் அலி கான் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். அதேபோல முன்னணி காமெடி நடிகர் யோகி பாபு, ரோபோ சங்கர் உள்ளிட்டவர்களும் நடித்திருந்தனர். 

ஒரு சயின்டிஸ்டாக வாழ்ந்து வரும், பணக்காரர் ஒருவருடைய வாழ்க்கையில் நடக்கும் அதிரடியான திருப்பங்களை கொண்டு, மசாலா கலந்து கமர்சியலாக சொல்லப்பட்ட படம் தான் "தி லெஜெண்ட்" இந்த திரைப்படம். பெரிய அளவில் வசூல் செய்யாது என்று பலரும் எதிர்பார்த்த நிலையில், அருள் சரவணனுக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. இந்த திரைப்படமும் கணிசமான வசூலை பெற்றது என்றே கூறலாம்.

Latest Videos


Legend Movie

இந்த படம் வெளியான பிறகு விமர்சன ரீதியாக பலர் சரவணனை கேலி செய்தாலும், தான் அதை குறித்து கவலைப்பட போவதில்லை என்றும், நடிப்பு என்பது சிறுவயதிலிருந்தே தனக்கு இருக்கும் மிகப்பெரிய ஆசை என்றும், இப்போது அதற்கான நேரம் வந்திருப்பதால் தன்னுடைய முழு திறமையும் பயன்படுத்தி தொடர்ச்சியாக திரைப்படங்களில் நடிப்பேன் என்றும் கூறியிருந்தார் சரவணன். 

இந்த சூழலில் தான் பிரபல இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் முற்றிலும் மாறுபட்ட ஒரு திரைப்படத்தில் சரவணன் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில் அந்த திரைப்படம் குறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசியுள்ள அருள் சரவணன், "இந்த திரைப்படத்தில் நான் வித்தவுட் மேக்கப்பில் தான் நடித்திருக்கிறேன். முழுக்க முழுக்க என்னுடைய கேரக்டர் ஒரு Rugged லுக்கில் இருக்கும், இந்த படத்தில் நடிக்கும் ஒவ்வொரு கதாபாத்திரமும் மிகச்சிறந்த நடிகர்களால் உருவாக்கப்பட்டு வருகின்றது. மக்கள் அனைவரும் ரசிக்கும் வண்ணம் ஜனரஞ்சகமாக இந்த திரைப்படம் உருவாகி வருகிறது, விரைவில் அப்படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும்" என்று தெரிவித்திருக்கிறார்.

Saravanan new movie

பிரபல இயக்குனர் வெற்றிமாறனின் உதவி இயக்குனராக பணியாற்றி வந்தவர் தான் துரை செந்தில்குமார். கடந்த 2013ம் ஆண்டு வெளியான பிரபல நடிகர் சிவகார்த்திகேயனின் "எதிர்நீச்சல்" என்கின்ற திரைப்படத்தின் மூலம் இவர் இயக்குனராக களம் இறங்கினார். தனுஷ் தானே முன்வந்து சிவகார்த்திகேயனுக்காக தன்னுடைய சொந்த தயாரிப்பில் உருவாக்கிய திரைப்படம் தான் "எதிர்நீச்சல்". அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து "காக்கிச்சட்டை", "கொடி", "பட்டாஸ்" போன்ற திரைப்படங்களை இயக்கி வந்த துறை செந்தில்குமார், இறுதியாக இந்த ஆண்டு துவக்கத்தில் வெளியான "கருடன்" என்கின்ற திரைப்படத்தை இயக்கிய அசத்தியிருந்தார். 

நடிகர் சூரியை ஒரு ஆக்சன் ஹீரோவாக அறிமுகம் செய்தது வெற்றிமாறன் என்றாலும், பட்டை தீட்டப்பட்ட முற்றிலும் மாறிய ஒரு ஆக்சன் ஹீரோவாக தமிழ் மக்கள் மத்தியில் அவரை அறிமுகம் செய்தது துரை செந்தில்குமார் என்றால் அது சற்றும் மிகை ஆகாது. இந்த சூழலில் கதைக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கும் துறை இயக்கத்தில் உருவாகி வரும் சரவணனின் இந்த புதிய திரைப்படமும், அவருக்கு ஒரு டர்னிங் பாயிண்டாக அமையும் என்று பெரிய அளவில் எதிர்பார்க்கப்படுகிறது.

ஹைக்கூ கவிதை வரிகளால்... வித்யாசாகர் இசையில் உருவான முதல் சூப்பர் ஹிட் பாடல்! எது தெரியுமா?

click me!