பேச்சால் கவர்ந்தவர் டிடி
சின்னத்திரையில் பிரபல தொகுப்பாளியாக வலம் வருபவர் திவ்ய தர்ஷினி. செல்லமாக டிடி என அழைக்கப்படும் இவர் க்யூட்டான ஸ்மைல், கலகலப்பான பேச்சால் ரசிகர்களை கவர்ந்தார். இவரது அக்கா பிரியதர்ஷினியும் தொகுப்பாளியாக உள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர், காஃபி வித் டிடி, ஜோடி நம்பர் 1, ஹோம் ஸ்வீட் ஹோம் போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார் டிடி. இவற்றில் பெரும்பாலான நிகழ்ச்சிகள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தவை.
விவாகரத்தில் முடிந்த திருமணம்
இவர் தனது நெருங்கிய நண்பரான ஸ்ரீகாந்த்தை கடந்த 2014-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் திருமணமான சில மாதங்களிலேயே இருவருக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்து பிரிந்தனர். அதன் பின்னர் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் முழு கவனம் செலுத்தி வரும் டிடி, அவ்வப்போது சினிமாவிலும் வெயிட்டான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
படங்களில் பிசி
அந்த வகையில் கவுதம் மேனன் இயக்கத்தில் தயாராகி வரும் துருவ நட்சத்திரம் மற்றும் ஜோஷ்வா போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் டிடி. இப்படங்கள் விரைவில் ரிலீசாக உள்ளன. மேலும் சில படங்களிலும் டிடி நடித்து வரும் நிலையில், அவர் கர்ப்பமாக இருப்பது போன்ற புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.