திருமணத்துக்கு பின் நடிப்புக்கு டாடா காட்டிய ஷாலினி
முன்னணி நடிகையாக வலம்வந்தபோதே திருமணம் செய்துகொண்ட ஷாலினி, திருமணத்திற்கு பிறகு சினிமாவிற்கு முழுக்கு போட்டு இல்லற வாழ்க்கையில் கவனம் செலுத்தி வந்தார். அன்றிலிருந்து சிறந்த குடும்பத் தலைவி ஆகவும், மகள் அனோஷ்கா மற்றும் மகன் ஆத்விக்கிற்கு சிறந்த அம்மாவாகவும் தன்னுடைய கடமையை தொடர்ந்து செய்து வருகிறார்.