Radhe Shyam : பின்னடைவை சந்தித்த ராதே ஷ்யாம்..நஷ்டத்தை ஏற்றுக்கொண்ட பிரபாஸ்..எத்தனை கோடி கொடுத்தார் தெரியுமா?

Kanmani P   | Asianet News
Published : Mar 21, 2022, 08:07 PM IST

Radhe Shyam : ராதே ஷ்யாம் படத்தின் மிக மோசமான தோல்விக்கு பிரபாஸ் பொறுப்பேற்றுள்ளார். அதற்கென தனது சம்பளத்தில் பாதி சம்பளத்தை திருப்பி கொடுத்துள்ளார்.

PREV
18
Radhe Shyam : பின்னடைவை சந்தித்த ராதே ஷ்யாம்..நஷ்டத்தை ஏற்றுக்கொண்ட பிரபாஸ்..எத்தனை கோடி கொடுத்தார் தெரியுமா?
Radhe Shyam

டோலிவுட்டில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் பிரபாஸ். இவர் 2004 ஆம் ஆண்டு வெளிவந்த வர்ஷம் என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் பதிந்தார்.

28
Radhe Shyam

கடந்த 2015 ஆம் ஆண்டு ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்த பாகுபலி பிரபாஸை பேன் வேர்ல்ட் ஹீரோவாக்கியது. இந்த படத்தின் மூலம் நடிகர் பிரபாஸ் தெலுங்கில் மட்டும் இல்லாமல் பிற மொழிகளிலும் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை சேர்ந்தார்.

38
Radhe Shyam

அதனை தொடர்ந்து இவர் நடிப்பில் வெளிவந்த சாஹோ மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. அதோடு ரூ.400 கோடிகளுக்கு மேல் வசூலித்து. இதன் மூலம் பிரபாஸ் அதிக சம்பளம் வாங்கும் ஹீரோவாக மாறிவிட்டார்.

மேலும் செய்திகளுக்கு...RadheShyam song promo : நாளை வெளியாகும் ராதே ஷ்யாம் Musical Of Ages. ப்ரோமோ...

48
Radhe Shyam

இதையடுத்து பிரபாஸ் யூவி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில்ராதே ஷியாம் திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில் பூஜா ஹெக்டே நாயகியாக நடித்துள்ளார்.

58
Radhe Shyam

தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில் வெளியிடப்பட்ட இந்த படத்திற்கு   ஜஸ்டின் பிரபாகரன் இசை அமைத்துள்ளார். வெளியான பாடல்கள் நல்ல வெற்றியை அடைந்தது.

68
Radhe Shyam

இந்த படம் பொங்கல் விருந்தாக கடந்த ஜனவரி 14-ம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் செய்யப்படும் என அறிவிக்கபட்டு பின்னர் கொரோனா பரவலால் பட ரிலீஸ் தள்ளிப்போனது..

78
Radhe Shyam

இதை தொடர்ந்து ராதே ஷ்யாம் வருகிற மார்ச் 11-ம் தேதி இந்த படம் திரைக்கு வந்தது. ஆனால் முந்தைய படங்களின் வெற்றியை இந்த படம் ஈட்டித்தரவில்லை. சுமார் 350 கோடியில் உருவான ராதே ஷ்யாம் வசூலிலும் சொதப்பியுள்ளது. 

மேலும் செய்திகளுக்கு...RadheShyam song promo : நாளை வெளியாகும் ராதே ஷ்யாம் Musical Of Ages. ப்ரோமோ...

88
Radhe Shyam

இந்த நஷ்டத்தை ஈடுகட்ட பிரபாஸ் தனது 100 கோடி சம்பளத்திலிருந்து ரூ.50 கோடியை திருப்பி கொடுத்துள்ளாராம். பிரபலங்கள் பலரும் தங்களது பட பிளப்பிற்கு தான் பொறுப்பேற்க முடியாது எனக்கான சம்பளம் வேண்டும் என நிற்கும் சூழலில் பிரபாஸின் இந்த செயல் வரவேற்பை பெற்றுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories